Friday, May 10, 2019

தமிழ் ஓசை...

தமிழ் ஓசை....

ஜோ. மல்லூரியின் சிலிர்ப்பூட்டும் தமிழ்...

அகநானூறு - புறநானூறு
அடிப்படை வேறுபாடு?

கட்டி முத்தமிட்டால் - அது அகம்.!
கத்தியை முத்தமிட்டால்--அது புறம்!
------
மதுக்கடை-நூலகம் இரண்டின் முரண்பாடு எது?

ஒன்று - - மயங்குவதற்கு.
இரண்டு - - தெளிவதற்கு.
----------
விருந்தும், விருதும் பெறும் போது
என்ன மனநிலை?
இரண்டும் இளைப்பாறுவதற்கான மரநிழல்!
தங்குவதற்கான கூடாரமல்ல!
----------
தவம் எது? தாகம் எது?

தாகம் இல்லாதது தவம்!
தவம் இல்லாதது தாகம்!
-----------
மழை நாளில் காதலியோடு இருந்தால்?

குடை பிடிப்பதைத் தவிர்ப்பேன்;
அதற்குத் தடை விதிப்பதை எதிர்ப்பேன்.
-------
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும்?

அவன் இருக்கும் பொழுது தொழப்பட வேண்டும்.
அவன் இல்லாத போது அவனுக்காக
அழப்பட வேண்டும்.

தமிழ் மகிழ்கிறது இவரது எண்ணத்தில்.

No comments: