Thursday, May 30, 2019

இத சொன்னா குற்றம்னு சொல்றாங்க...

அறிவுறைகள் ஆயிரம் பேர் கூறுகிறார்கள்.

ஆனால் அதன் படி அவர்களே வாழ்வது இல்லை.

உண்மையைப் பத்தி பேசுபவன்'
பொய்யனாகத்தான் வாழ்கிறான்.

புத்தனைப் பத்தி பேசுபவனிடம் அன்பு இல்லை.

இயேசுவைப் பற்றி பேசுபவனிடம் இரக்கம் இல்லை.

அல்லாவைப் பற்றி பேசபவனிடம் சமத்துவம் இல்லை.

சிவனைப் பற்றி பேசுபவனிடம் நல்ல ஒழுக்கம் இல்லை.

காந்தியைப் பற்றி பேசுபவனிடம் அகிம்சை இல்லை.

போஸ்ஸைப் பற்றி பேசுபவனிடத்தில் நல்ல வீரம் இல்லை.

கர்ம வீரர் பற்றி பேசபவனிடத்தில் நல்ல அறிவு இல்லை.

வள்ளுவனைப் பற்றி பேசுபவனிடத்தில்  நல்ல தமிழ் இல்லை.

No comments: