Wednesday, July 31, 2019

வரலாற்றில் இன்று : 01.08.2019

*ஆகஸ்டு 1, கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌கிமு 33 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

🖌527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

🖌1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

🖌1461 – நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

🖌1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

🖌1498 – கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

🖌1619 – முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

🖌1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

🖌1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

🖌1820 – லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

🖌1831 – புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

🖌1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

🖌1894 – கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

🖌1902 – பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

🖌1902 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

🖌1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

🖌1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

🖌1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

🖌1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

🖌1936 – பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

🖌1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

🖌1944 – போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

🖌1952 – தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

🖌1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

🖌1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

🖌1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

🖌1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

🖌1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

🖌2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

🖌2004 – பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

🖌2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

🖌2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்

*🔵பிறப்புகள்*

🖌1876 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)

🖌1924 – அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (இ. 2015)

🖌1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர் (இ. 1979)

🖌1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

🖌1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கிஸ்தான் சனாதிபதி

*🔵இறப்புகள்*

🖌1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)

🖌2008 – ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)

🖌2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி. 1933)

*🔵சிறப்பு தினம்*

🖌உலக தாய்ப்பால் தினம்

🖌உலக சாரணர் தினம்

🖌அங்கோலா – இராணுவ தினம்

🖌 பெனின்– தேசிய தினம் (1960)

🖌கொங்கோ – பெற்றோர் தினம்

🖌லெபனான் – இராணுவ தினம்

🖌சுவிட்சர்லாந்து – தேசிய தினம் (1291)

*🌹தொகும்பு*

_*🔵நாடும் நடப்பும்*_

No comments: