Sunday, July 7, 2019

அன்றும் இன்றும்...

அன்று
வீடு நிறைய குழந்தைகள்
இன்று
வீட்டுக்கொரு குழந்தை

அன்று
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
இன்று
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

*அன்று*
*குறைந்த வருமானம்*
*நிறைந்த நிம்மதி*
*இன்று*
*நிறைந்த வருமானம்*
*குறைந்த நிம்மதி*

*அன்று*
*படித்தால் வேலை*
*இன்று*
*படிப்பதே வேலை*

அன்று
வீடு நிறைய உறவுகள்
இன்று
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை

அன்று
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு

*அன்று*
*முதுமையிலும் துள்ளல்*
*இன்று*
*இளமையிலேயே அல்லல்*

அன்று
உதவிக்கு தொழில்நுட்பம்
இன்று
தொழில்நுட்பம்தான் எல்லாம்

அன்று
யோக வாழ்க்கை
இன்று
எந்திர வாழ்க்கை

*அன்று*
*தியாகிகள் நாட்டை காப்பாற்றினர்*
*இன்று*
*அரசியல்வாதிகள் நாட்டை விற்கின்றனர்*

அன்று
படங்களில் ஒரு குத்து பாட்டு
இன்று
குத்து பாட்டில் தான் படமே

அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க
இன்று
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

*அன்று*
*அறிஞர்கள் பாதையில்*
*இன்று*
*இளைஞர்கள் போதையில்*

அன்று
ஒரே புரட்சி
இன்று
ஒரே கட்சி

அன்று
சென்றார்கள் வளர்ச்சியில்
இன்று
சொல்கிறது சினிமா கவர்ச்சியில்

அன்று
சட்டசபை
இன்று
சட்டை கிழியும் சபை

*அன்று*
*மக்கள் நலன் ஆட்சி*
*இன்று*
*சிக்கல் தரும் ஆட்சி*

அன்று
ஊரே கூட கோலாகல விழா
இன்று
ஊருக்கே போக முடியாத மூடுவிழா

*அன்று*
*கைவீசி நடந்தோம்*
*இன்று*
*கைப்பேசியுடன் நடக்கிறோம்*

*அன்று*
*ஜனநாயகம்*
*இன்று*
*பணநாயகம்*

அன்று
விளைச்சல் நிலம்
இன்று
விலை போன நிலம்

*அன்று*
*தொட முடியாத உச்சத்தில் காதல்*
*இன்று*
*தொட்டு முடியும் எச்சம் காதல்*

அன்று
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
இன்று
கோடை விடுமுறையிலும் கைப்பேசியிடம் தஞ்சம்

*அன்று*
*உயிரை கொடுத்து காதல் வாழ்ந்தது*
*இன்று*
*காதல் இல்லைனா உயிரை பறிக்கிறது*

அன்று
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று
நடக்குது வெற்று நிகழ்ச்சி

*அன்று*
*வாழ்ந்தது வாழ்க்கை*
*இன்று*
*ஏதோ வாழும் வாழ்க்கை*

*நன்றி!*

No comments: