Saturday, August 31, 2019

வரலாற்றில் இன்று : 31-08-2019

*கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.

🖌1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.

🖌1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.

🖌1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.

🖌1795 – திருகோணமலையை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

🖌1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.

🖌1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

🖌1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.

🖌1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 ப்ர்ர்ட் உயிரிழந்தனர்.

🖌1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.

🖌1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

🖌1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.

🖌1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.

🖌1940 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.

🖌1941 – இரண்டாம் உலகப் போர்: செர்பியத் துணை இராணுவப் படைகள் செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.

🖌1945 – ஆத்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

🖌1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.

🖌1958 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

🖌1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

🖌1963 – வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.

🖌1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.

🖌1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.

🖌1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.

🖌1987 – தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.

🖌1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.

🖌1993 – உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.

🖌1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.

🖌1997 – வேல்சு இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

🖌1998 – வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.

🖌1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர்.

🖌1999 – மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது.

🖌2005 – பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.

🖌2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.

🖌2016 – பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானித்ததில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

*🔵பிறப்புகள்*

🖌12 – காலிகுலா, உரோமைப் பேரரச்ர் (இ. 41)

🖌1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)

🖌1569 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627)

🖌1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர், மருத்துவர் (இ. 1952)

🖌1874 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (இ. 1949)

🖌1896 – மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, தமிழகப் பதிப்பாசிரியர், படைப்பாளர் (இ. 1985)

🖌1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)

🖌1907 – ரமன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (இ. 1957)

🖌1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)

🖌1923 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)

🖌1919 – அம்ரிதா பிரீதம், இந்தியக் கவிஞர் (இ. 2005)

🖌1944 – கிளைவ் லொயிட், கயானா துடுப்பாட்ட வீரர்

🖌1947 – சொம்ச்சாய் வொங்சவாட், தாய்லாந்தின் 26வது அரசுத்தலைவர்

🖌1949 – அக் பொலிட்சர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

🖌1949 – ரிச்சர்ட் கியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

🖌1955 – லாலுபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி

🖌1956 – சாய் இங்-வென், சீனக் குடியரசின் அரசியல்வாதி

🖌1963 – ரிதுபர்னோ கோஷ், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2013)

🖌1969 – ஜவகல் ஸ்ரீநாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

🖌1970 – யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா

🖌1970 – ஸாக் வார்ட், கனடிய நடிகர், தயாரிப்பாளர்

🖌1977 – ஜெஃப் ஹார்டி, அமெர்க்க மற்போர் வீரர், பாடகர்

🖌1979 – யுவன் சங்கர் ராஜா, இந்திய இசையமைப்பாளர், பாடகர்

*🔵இறப்புகள்*

🖌1814 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (பி. 1738)

🖌1920 – வில்கெம் உண்ட், செருமானிய மருத்துவர், மெய்யியலாளர் (பி. 1832)

🖌1950 – சு. சி. பிள்ளை, இந்தியக் கணிதவியலாளர் (பி. 1901)

🖌1953 – மங்கலங்கிழார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1895)

🖌1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1882)

🖌1973 – ஜான் போர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1894)

🖌1986 – ஹென்றி மூர், ஆங்கிலேயச் சிற்பி (பி. 1898)

🖌1989 – புதுவை சிவம், புதுவை எழுத்தாளர், கவிஞர், இதழாளர் (பி. 1908)

🖌1995 – பியான்ட் சிங், பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1922)

🖌1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)

🖌2000 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (பி. 1927)

🖌2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)

🖌2012 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (பி. 1925)

🖌2014 – சத்திராசு லட்சுமி நாராயணா, இந்திய இயக்குநர் (பி. 1933)

*🔵சிறப்பு தினம்*

🖌விடுதலை தினம் (கிர்கிஸ்த்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)

🖌விடுதலை தினம் (மலாயா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)

🖌விடுதலை தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)

🖌தேசிய மொழி தினம் (மல்தோவா)

_*🖌நேசம்.காம் ♨*_

No comments: