Tuesday, September 17, 2019

அல்சர் நோயிலிருந்து விடுபட எளிமையான மருத்துவம்...

வாட்டி வதைக்கும் #அல்சர் நோயிலிருந்து விடுபட எளிமையான மருத்துவம்.....

வணக்கம் அல்சர் என்பது உடலில் உருவாகும் புண்கள் அதாவது உணவுக்குழாய் இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியில் இருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களை குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கின்றோம். அல்சர் பிரச்சனைக்கான முதல் அறிகுறி வயிற்று வலி தான். வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போல் வலி ஏற்படும். வயிற்றில் புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படும்போது இந்த வயிற்று வலி ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் இருக்கும் போது இன்னும் அதிகமாக வலி ஏற்படும். இங்கே நீங்கள் பார்க்கப்போவது அருமையான வீட்டு வைத்திய முறையை பற்றி தான். இதை தொடர்ந்து செய்தாலே போதும் முழுமையாக குணமடையலாம். இந்த பதிவை இறுதிவரை படியுங்கள்.

மணத்தக்காளிக் கீரை

இந்த கீரையைப் பாசிப் பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகும். அதேபோன்று இந்த கீரையை வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் கிடைக்கும். மேலும் சீரணக் கோளாறு கல்லீரல் கோளாறுகள் இருமல் அனீமியா தோல் நோய் போன்றவையும் குணமாகும்..

தேங்காய் பால்

தேங்காய் பால் அல்சருக்கு அருமையான வைத்தியம் இந்த தேங்காய்ப்பால். தினமும் தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் குணமாகும். வேண்டுமென்றால் இதில் ஒரு ஏலக்காய் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

மாங்கொட்டை

மாங்கொட்டை பருப்பை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு இந்தப் பொடியை காலையும் மாலையும் ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் விரைவில் ஆறும்.

பச்சை வாழைப்பழம்

பச்சை வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வர வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை வளர செய்யும். இதனால் அல்சர் நோய் விரைவில் குணமாகும்.

புழுங்கல் அரிசி

புழுங்கல் அரிசி கஞ்சி குழைந்த புழுங்கல் அரிசியுடன் சிறிது வெந்தயம் ஒரு பல் பூண்டு சிறிது சீரகம் சேர்த்து கஞ்சியாக வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் விரைவில் ஆறும்.

தயிர்

தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நோயை குணப்படுத்த உதவுகிறது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்டை எடுத்து அரைத்து சாறு எடுத்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்

மாதுளை

மாதுளை பழத் தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

கொத்தமல்லி ஜூஸ்

அல்சரை குணப்படுத்தும் அருமையான வீட்டு வைத்தியம் இது. ஒரு கைப்பிடி கொத்தமல்லியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விட்டு அரைத்து ஜூஸ் எடுத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகும். முக்கியமாக உணவு கட்டுப்பாடு மிக மிக அவசியம்.

No comments: