Sunday, March 15, 2020

ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்வதன் அவசியம்...

நண்பர்களே ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்வதன் அவசியம் மற்றும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

நாம் உட்கொள்ளும் உணவு நமது ஆரோக்கியத்தின் மீது ஒவ்வொரு நாளும் நல்ல விதத்திலோ அல்லது தீய விதத்திலோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் நம்மை வழிநடத்த ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவினை உட்கொள்வது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சியுடன் கூடிய ஊட்டச்சத்து உணவுகள் ஆரோக்கியமான எடையை பெறுவதற்கும் இதய நோய் மற்றும் புற்று நோயை தடுப்பதற்கும் வழிவகுக்கும்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் சிறு வயதிலேயே உடல் பெருக்க நோய் வருவதற்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமான உடல் எடையை கொண்டவர்களும் தவறான உணவு பழக்கத்தின் மூலமாக ஆரோக்கியமற்ற உடல் நலத்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆரோக்கியமற்ற மற்றும் ஊட்டச் சத்து குறைந்த உணவுப் பழக்கத்தினால் இதயநோய்கள், ரத்த கொதிப்பு, இரண்டாம் வகை சர்க்கரை வியாதி மற்றும் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு  அதிகம் உள்ளது.

குழந்தைப்பருவத்தில் கொடுக்கப்படும் உணவு பழக்கமே பதின்பருவத்தில் தொடரப்படுகிறது எனவே குழந்தைப் பருவத்தில் நல்ல உணவு பழக்கத்தை கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கம், ஆரோக்கியமான எடை, நாள்பட்ட வியாதிகள் போன்றவை கவனத்தில் கொள்ளக் கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

படிப்படியாக ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாறுவதன் மூலமாக ஆரோக்கியமான உடலையும் உற்சாகமான வாழ்வையும் உடல் வலிமையையும் பெற முடியும்.

சிறிய உடற்பயிற்சி சிறிய உணவு பழக்க மாற்றம் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலமாக பெரிய மாற்றத்தை உடல் ஆரோக்கியத்தில் பெறமுடியும் என்பதுதான் உண்மை.

எனவே ப்ரெண்ட்ஸ் இன்றிலிருந்து ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்வில் வாழ்க்கையில் பெரிய ஆரோக்கியத்தை அனுபவிக்க வாழ்த்துகிறேன் நன்றி.

இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க தேங்க்யூ வெரி மச்

No comments: