Saturday, March 5, 2022

ரஷ்யா - உக்ரேன் கணவன் மனைவி கதை!

ஒரு கதை சொல்லவா சார்?

எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஏன் சண்டை என்று!

ரஷ்யா vs உக்ரைனின்  சண்டை மிகவும் சிக்கலானதாக இருப்பதால் அதை விளக்கினால் சரியாக வராது! அதனால் இக்கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்! 

 20 ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் பக்கத்துக்கு வீட்டு காரனின் ( அமெரிக்கா ) தூண்டுதலால்  தனது கணவனுடன் (ரஷ்யா) விவாகரத்து செய்து  பாகம் பிரித்து கொண்டு சென்றான்.  அப்போது அவளுக்குப் பல  குழந்தைகள்  இருந்தன.

      முன்னாள் கணவரும் அவளுடன்  மிகவும் இணக்கமாகவே பிரிந்து சென்றார். அவளுக்கு நிறைய குடும்ப சொத்துக்களை விட்டுக் கொடுத்தார்.  அதன் பிறகும், முன்னாள் கணவர் அவளுக்காக 200 பில்லியனுக்கும் அதிகமான கடன்களை அவள் சார்பாக வட்டியுடன் திருப்பியும் செலுத்தினார்.

தனது முன்னாள் கணவரைப் பிரிந்த பிறகு, உக்ரைன் சீமாட்டி, ஒரு கிராமத்து மைனர் குஞ்சு (அமெரிக்கா) மற்றும் பல ஆண் நண்பர்களுடன் (மேற்கத்திய நாடுகள்)  ஊர் சுற்றவும் தொடங்கினாள .  அது கூடப்  பரவாயில்லை, ஆனால் அவளின் காதலன் மைனர் குஞ்சு  சொல்வதை முழுமையாகக் கேட்டு, தன் முன்னாள் கணவனின்  வீட்டுக்குள் குப்பையை போடுவது , சில்மிஷங்கள் செய்வது என பல தொல்லை கொடுத்து வந்தாள். சமயத்தில் தனது காம்பௌண்ட் வேலியை நகர்த்தியும் போட மைனர் குஞ்சால் நிர்பந்திக்கவும் பட்டாள் .

இதனால் முன்னாள் கணவர் மிகவும் மனமுடைந்து கோபமடைந்தார். பல முறை சமாதானமாக, மைனர் குஞ்சுடன் சேர வேண்டாம், நல்லதல்ல என அறிவுரையும் செய்தார். 

கேட்டாளா அவள்? அவளது பிடிவாதம்  இன்னும் அதிகமானது. மைனர் குஞ்சு அவளை ஒரு அடியாள் கேங்கில் ( NATO ) சேரு, உன் கணவனை உதைக்கலாம் என்ற வஞ்சக எண்ணத்தைப் பரப்ப, இளவட்டக்காரி அதற்கு மயங்கிப் போனாள். மைனர் குஞ்சு இப்படித்தான் பல குடும்பப்  பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன் (குவைத், ஈராக், லிபியா, ஆஃப்கான், வியட்நாம் குடும்பங்கள்).

அந்த மைனரின்பேச்சை கேட்டு தனது முன்னாள் கணவன் ஜாடையில் இருந்த ( Russia  speaking  )குழந்தைகளையும் அடித்து தொந்தரவு செய்தாள்.  தனது ஒரு குழந்தையை மட்டுமாவது திருப்பித் தருமாறு கணவர் வலியுறுத்தினார்: குழந்தையின் பெயர் கிரிமியா. அவள் தர மறுத்ததால் ஒரு நைட்டில் கிரிமியா பாப்பாவைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார் கணவர் (2015)

உக்ரைன் அழகி வெறுப்பை உமிழத் தொடங்கினாள்.  அவள் திடீரென்று நேட்டோ குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள்.  அதன் காரணமாக அவரது முன்னாள் கணவரை மேலும் வருத்தமுறச் செய்து மன அழுத்தம் உண்டாக்கினாள்.

கிராமத்து மைனர் குஞ்சு அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அவளை செமையாக உபயோகிச்சான்.  அவளது  முன்னாள் கணவரைக் கொடுமைப்படுத்த மட்டுமே அவளைப் பயன்படுத்த விரும்பினான்.  ஒவ்வொரு முயற்சியிலும், கணவரின் மேலும் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டே தங்கள் தந்தையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 காலாவதியான சில பொருட்களை (வெடிமருந்துகள்) மட்டும் அவ்வப்போது அனுப்பிக் கொண்டே எப்போதும் அட்டூழியத்திற்குப்  பக்கபலமாக இருந்தான் மைனர் குஞ்சு. 

 உக்ரைன் அழகி, தனக்கு ஆதரவாக எல்லாரும் இருப்பதாக நினைத்தாள், இதனால் மேலும் தன் முன்னாள் கணவரிடம் இன்னும் அதிக முரட்டுத்தனத்துடன் வன்மம்  காட்டினாள்.

மேலும் அவளது முன்னாள் கணவன் மூலம் பெற்ற இரண்டு மகன்களுக்கு, தாயின் சுயரூபம் தெரிய வரவே, தைரியமாக அவளிடம் சென்று அப்பாவிடம் அனுப்பி வைக்குமாறு அவளிடம் சண்டை போட்டனர்.

இதனால் அவள் மாற்றாந்தாய் போல மாறி, இரண்டு பிள்ளைகளையும் கொடுமைப் படுத்தத் தொடங்கினாள். 

முன்னாள் கணவரால் இதைத் தாங்க முடியவில்லை,  தனது குழந்தைகளைப் பார்க்க, அங்கு விரைந்தார். இரண்டு குழந்தைகளான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியோரைத் திரும்பிக் கொடுக்குமாறு கேட்க, அவள்  முரண்டு பிடிக்கத் தொடங்கினாள்.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவர் தனது அடியாட்களோடு அவள் வீட்டிற்குச் சென்று தனது குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டு வர தற்போது முனைந்துள்ளார்.

இதற்கிடையே மைனர் குஞ்சு, 'எனக்கெல்லாம் உங்க ஏரியாவிலே சண்டை போட வராது, நான் சண்டை போட்ட பல  இடங்களிலெல்லாம் தோற்றுத்தான் போயிருக்குறேன். எனவே, செலவுக்குக் கொஞ்சம் பணம் தர்றேன். சமாளிச்சுக்க! கோர்ட் கேஸ் போன்றவற்றை நான் பார்த்துக்கிறேன்!' என்று கை விட்டு விட்டார். மற்ற ஆண் நண்பர்களும் வடிவேலுவின் அடியாள் போலவே பின்னாலே இருந்து உக்ரைன் வடிவேலை உசுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்!

படிச்சீங்களா கதையை? கணவன் நல்லவன். அந்தப் பெண்தான் மோசமானவள். இலங்கை, இந்தியராகிய நீங்கள் உங்களின் 75 ஆண்டு நண்பன், ரஷ்யக் கணவனின் தோளோடு தோள் நிற்பீர்களா? இல்லை அந்த வெறுஞ்சிறுக்கியை சப்போர்ட் பண்ணுவீங்களா? 

யோசிங்க!

1 comment:

Unknown said...

Wrong statement. Once Ukraine girl divorced, she has got all right to marry anyone. Her former husband no any right to ask her about the remarriage.