Sunday, May 8, 2022

கீழடி தமிழி பொறிப்பில் "குவிரன்" - பொருள் என்ன?

கீழடி ஆய்வுகள் படுஜோராக செய்தித்தாள்களில் செய்யப்பட்ட தருணம். 

எங்கள் வீட்டின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த, தெலுங்கு ராஜூ இனத்தை சேர்ந்த நண்பருக்கு மகள் பிறந்திருந்தாள்.

மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டேன். அவர் கு என்ற எழுத்தில் துவங்கும், "குவிரா"  தன்னுடைய மகளுக்கு எனப் பெயர் வைத்திருந்திருப்பதாக கூறினார்.

உடனே நான் ஆவலில், இது உங்கள் குடும்ப பெயரா? அதற்கு பொருள் என்ன? வென கேட்டேன். குடும்பப் பெயர் இல்லை. ஆனால் சரியான பொருள் தெரியாது, ஏதோ செல்வம் சம்பந்தமான பெயர் என வீட்டில் சொன்னார்கள் என்றார்.

அவரிடம் செய்தித்தாளை நீட்டினேன். குவிரன் என்ற பெயருடன் கீழடியில் பானையோடு கிடைத்துள்ளது என்றேன்.

சுவாரஸ்மான அவர், உங்களுக்கு அர்த்தம் தெரியுமா என என்னைக் கேட்டார்.

நான் தேடியவரை கிடைத்த தகவல், குவிரன் என்பது குபேரன் என்ற பிராக்ருத அ சமசஸ்கிருத மொழிச் சொல்லின் தமிழ் வடிவம் என்றேன்.

குவிரன் என்பது குபேரன் என்பதன் மரூஉ என்றேன். தமிழக குடவரையிலும், கொடுமணல் அகழாய்விலும் குவிரன் என்ற தமிழி  கல்வெட்டாக இப்பெயர் வருகிறது.

குவிரா, குயிரா - திமிழ்
குபிரா - பழஞ்சிங்களம்
குபேரா - வடமொழி

குவி என்பது தமிழ்ச்சொல்லே. அது செல்வம் குவிந்த வணிகரை குறிக்கும் அல்லது பொருட்கள் குவிந்த வணிகரை குறிக்கும்  என்றும் சிலர் கருதுகின்றனர். 

நான் விட்டாலும் கீழடி விடுவதாக இல்லைப் போல, கீழடியில் கிடைத்தப் பெயர் தாங்கிய ஒருத்தி எங்கள் வீட்டில் வசிக்கின்றாள்.

நன்றி...

No comments: