ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒரு வழியாக அது முடிவுக்கு வருகிறதே என்று தைரியமாக இருங்கள்.
நம்மை பற்றி தவறான எண்ணம் உள்ளவர்களிடம்.
நாம் எவ்வளவு நியாயப்படுத்திப் பேசினாலும் அது எடுபடப்போவதில்லை
ஆதலால் மௌனமே சிறந்த பதில்..
எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
வழியாய் எடுத்துக் கொள்ளுங்க வாழ்க்கை சிறக்கும்…. வலிகளைத் தாங்கினால் வழிகள் கிடைக்கும்...
சில நேரத்தில் அனுசரித்துப்போகக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பல நேரங்களில் தேவையில்லாதக் கஷ்டப்படத் தயாராகிக் கொள்ளுங்கள்...
யாரையும் பார்த்து பெரிதாக பிரமிக்காதீர்கள். பிரமித்தால் நீங்கள் பின்னடைந்து போய்விடுவீர்கள்... பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்...
அடுத்தவர்களைப் போல வாழ ஆசைப்படாதீர்கள். ஒட்டு மொத்த அமைதியையும் இழந்திடுவீர்கள்
யாரோடும் உங்களை ஒப்பிடாதீர்கள்
பிறகு உங்களையே உங்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்..
யார் விமர்சனத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பிறகு நீங்கள் உங்களுக்காகவே வாழமுடியாது.
எதார்த்தமாக வாழப்பழகுங்கள் வாழ்க்கையை எளிதாக்கிவிடலாம்.
மகிழ்ச்சி, நம்பிக்கை, வெற்றி மற்றும் அன்பின் விதைகளை நடவு செய்யுங்கள் இவை அனைத்தும் ஏராளமாகத் திரும்பிவரும்
இது இயற்கையின் விதி..
பெற்றோர்களின் அருமை தெரியவேண்டும் என்றால் சொந்தக்காரர்களோடு தங்கிப்பாருங்கள் ...
சொந்தக்காரர்கள் அருமை தெரிய வேண்டுமென்றால் காசு இல்லாமல் வாழ்ந்துபாருங்கள்..
தயங்கிக் கொண்டே நிற்காதீர். மீண்டும் முயற்சி செய்துவிடுங்கள். வெற்றியானால் இன்னும் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுங்கள். தோல்வியானால் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ளுங்கள் முயன்றால் எதுவும் முடியும்..
நிராகரிப்புகளைக் கடந்தால்தான்
வரவேற்புகள் கிடைக்கும்...!!!!
நேர்மறை எண்ணத்தோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்... வாழ்க்கை வசப்படும்…
No comments:
Post a Comment