*ஆவி* என்றால் கண்ணுக்குத் தெரியாதது.
ஒருவர் இன்னொருவரை அடித்தால், அடித்தவருக்கும் அடி வாங்கியவருக்கும் *வலி என்ற உணர்வு* உண்டாகும்.
*இந்த உணர்வை உண்டாக்கியது ஒரு சக்தி*. அந்த சக்தியைக் கொண்டே ஒருவர் இன்னொருவரை அடித்தார்.
இந்த சக்தியையே ஆற்றல் என்று சொல்கிறோம்.
*செயலாற்ற* (செயல் + ஆற்ற(ல்) வேண்டும் என்று சொல்கிறோம்.
ஒரு செயலை ஆற்ற (செய்ய), ல் (ஆற்றல்) வேண்டும்.
*செயலாற்று* (செயல் + ஆற்று) என்று பொதுவாக நாம் சொல்வதுண்டு.
ஆக ஒரு செயல் அல்லது நிகழ்வு எனப்படுவது, அடையாளப்படுத்தப்பட வேண்டுமானால், *சக்தி எனப்படும் ஆற்றல்* வேண்டும்.
ஆக சக்தி எனப்படும் ஆற்றலை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அதனால் உண்டாகும் செயலாகிய நிகழ்வை மட்டுமே கண்ணால் பார்க்க முடியும்.
அப்படியானால் கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு செயலாகிய நிகழ்வை உண்டாக்குவது, கண்ணால் காண முடியாத சக்தி எனப்படும் ஆற்றலாகிய ஆவியே.
இந்த சக்தியாகிய ஆவி, அனைத்தையும் படைத்து உண்டாக்கிய இறைவனோடு இருக்கிறது.
அதுவே இறைவனின் (1) சக்தியாகவும் (Energy), (2) வல்லமையாகவும் (Strength), (3) ஆற்றலாகவும் (Power), ஆவியாக (E.S.P. 1,2,3. Spirit) இருக்கிறது
ஆகவேதான் இறைவனின் வார்த்தையில் (இறைவார்த்தையில்), *"கடவுளுடைய வார்த்தை ..... ஆற்றல் வாய்ந்தது* என்று எபிரேயர் 4:12ல் எழுதப்பட்டுள்ளது.
இந்த சக்தியாகிய ஆற்றல் எனப்படும் *ஆவி*, இறைவனின் விருப்பத்தை செயல்படுத்தினால் அது நன்மைக்குரியதாகவும், இறைவனின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தினால் அது தீமைக்குரியதாகவும் இருக்கிறது என்பதை, இப்பொழுது அறிந்து கொள்ள முடிகிறது.
அப்படியானால் தீய ஆவி என்பது இறைவனுக்கு எதிரான சக்தி என்பதையும் நாம் இப்பொழுது அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் *இறைவனின் விருப்பத்தை செயல்படுத்தினால், அது பரிசுத்த ஆவி* எனவும், இப்பொழுது அறிந்து கொள்ளலாம். *நான் பரிசுத்தனாய் இருப்பது போல நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்* என்பதின் மூலம் இறைவன் பரிசுத்தர் என்பதை தாமே நம்மிடம் சொல்கிறார்.
நன்மை, தீமை என்ற இரண்டு இயல்புதான் எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் இருக்கிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
ஆக, ஆவி என்பது எது என்றும், அதன் பயன் என்ன என்பதையும், அதன் தன்மை எப்படிப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டோம்.
இந்த செய்தியைக் கொடுக்க, என்னையும் இக்கருவியையும் பயன்படுத்திய, எனக்குள் இருக்கும் இறைவனுக்கு, நன்றியும் ஆராதனையும் செலுத்துகிறேன்.
என் ஆவி, ஆத்மா, சரீரத்துக்கு சொந்தமானவரும் உடைமையாக்கிக் கொள்ள உரிமையுள்ளவருமான, அதி உன்னத நித்திய உண்மையான நன்மையின் நிறைவான பரிசுத்த மூவொரு இறைவா, உம்மை நன்றியோடு ஆராதித்து, என்னை முழுமையாய் உமக்கே அர்ப்பணிக்கின்றேன். என்னை ஏற்றுக்கொண்டு முற்றிலும் உமதாக்கி உம் விருப்பம் நிறைவேற்ற பயன்படுத்துவீராக. ஆமென்
No comments:
Post a Comment