திருவிழாக்களை மிக அதிக பணச்செலவில் பிரமாண்டமாக கொண்டாடுவதே தங்கள் பங்கிற்கு பெருமை என்றும்,தங்களுக்கு அது கவுரவம் என்றும்,இதுதான் உண்மையான மகிழ்ச்சி என்றும், இதைத்தான் இறைவன் விரும்புகிறார் என்றும் நாமெல்லோரும் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்.
.
.
கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விழாவாக அறிவித்திருக்கிறது என்றால், அன்றைய விழாவிற்கான கருத்தை,அன்றைய புனிதர்களின் சாட்சிய வாழ்வை இறைமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவே,
மாறாக ஆடம்பரமாக விழா கொண்டாடி மகிழ்வதற்காக அல்ல.
மாறாக ஆடம்பரமாக விழா கொண்டாடி மகிழ்வதற்காக அல்ல.
உதாரணமாக பாத்திமாவில் அன்னை காட்சி கொடுத்து, மக்கள் அலகையிடமிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள தினமும் ஜெபமாலை செபிக்கவேண்டும் என்ற செய்தியையும் கொடுத்தார்கள்.
இந்த செய்தி ஒவ்வொரு கத்தோலிக்கரையும் சென்று சேரவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருநாளை பாத்திமா அன்னை திருவிழாவாக திருச்சபை அறிவிக்கின்றது.
இந்த செய்தி ஒவ்வொரு கத்தோலிக்கரையும் சென்று சேரவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருநாளை பாத்திமா அன்னை திருவிழாவாக திருச்சபை அறிவிக்கின்றது.
இதேபோன்றுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியை அந்த நாளைய திருவிழாக்கள் அறிவித்து வருகின்றன.
ஆக ஒரு திருவிழாவை கொண்டாடுகிறோம் என்றால் அவ்விழாவின் நோக்கத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.அவ்விழா நமக்கு தருகின்ற செய்தியை நாமும் அறிந்து பிறருக்கும் அச்செய்தியை அறிவித்தல் வேண்டும்
ஆனால் நாம் எவ்வாறு விழாக்களை கொண்டாடுகிறோம்???
லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து மிக ஆடம்பரமாக திருவிழாவை கொண்டாடுகிறோம். .
ஆனால் அவ்விழா எத்தகைய தாக்கத்தை அல்லது மனமாற்றத்தை அப்பங்கு மக்களிடத்தில் ஏற்படுத்தியது? என பார்ப்போமானால் எதுவுமே இருக்காது.
ஆனால் அவ்விழா எத்தகைய தாக்கத்தை அல்லது மனமாற்றத்தை அப்பங்கு மக்களிடத்தில் ஏற்படுத்தியது? என பார்ப்போமானால் எதுவுமே இருக்காது.
எது தேவையில்லையோ?எது யாருக்கும் பயனில்லையோ,அவைகளை நடத்தியே ஆகவேண்டும் என தீயாய் போரிடும் கத்தோலிக்க மக்கள்,நம் அன்னை திரும்ப திரும்ப தனது பல காட்சிகளின் மூலமாக தந்த எச்சரிக்கை செய்திகளை காதில் வாங்கவோ,அதை பின் பற்றவோ ஆர்வம் காட்டாதது ஏன்?அன்னையின் செய்திகளை உள்வாங்காமல்,அதை செயல்படுத்தாமல் அன்னைக்கு விழா கொண்டாடி என்ன பயன்?
அன்னையின் பிள்ளைகள் என்போம். ஆனால் அன்னை இரத்த கண்ணீர் வடித்த படி ‘’என் மக்களே உங்கள் கேளிக்கைகளை விட்டுவிட்டு என் பிள்ளைகளாய் என்னிடம் திரும்பி வாருங்கள்.எதிரியான சாத்தானிடமிருந்து உங்களையும் இந்த உலகம் முழுவதையும் பாதுகாக்க தினமும் ஜெபமாலை ஜெபியுங்கள்.என் மகனும் உங்கள் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்து உங்களுக்கு கொடுத்த இறையன்பு,பிறரன்பு பணிகளை இம்மண்ணில் முழுவீச்சில் நிறைவேற்றுங்கள்’’ என்று அறைகூவல் விடுக்கும் செய்தியை அசட்டை செய்வோம்.
அரியணையில் ராஜாதி ராஜாவாக வீற்றிருக்கவேண்டிய மகா வல்லமையுடைய கடவுளோ, மனித பிறவியெடுத்து அடிமையிலும் அடிமையாக வாழ்ந்து பாடுகள் பலப்பட்டு,இவ்வுலகிலுள்ள எல்லா மக்களின் பாவங்களையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு கொடூர சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தின் மூலமாக நம்மை மீட்டெடுப்பார்.
ஆனால் நாமோ, அந்த தியாகத்தின் கடவுளுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்கிறோம் என சொல்லிவிட்டு,நமது மனம் குளிர,நம் கண்கள் கண்டு மகிழ, கேளிக்கை நிகழ்வுகளை,திரையிசை நிகழ்வுகளை,ஆட்டம் பாட்டம்,கொண்டாட்டம்,அடித்து தூள் கிளப்பும் மேளம்,விண்ணை பிளக்கும் வானவேடிக்கை,பிரமாண்டம் என அந்த தியாகத்தின் கடவுளின் ஆலயத்திலேயே நடத்தி மகிழ்ந்து களிப்போம்..அதுமட்டுமா தெய்வீக திருப்பலியில் கூட கும்பம்,ஆரத்தி,நடனம் என ஆடம்பரங்களை புகுத்துவோம்.
யாருக்கு வேண்டும் உங்களது இந்த ஆடம்பரங்கள்?
மனித சிந்தையின் படி கூத்தடிக்க கத்தோலிக்க திருச்சபை ஒன்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல மாறாக இயேசு ஆண்டவரால் உருவாக்கப்பட்டது.
இத்திருச்சபையின் மிக முக்கியமான ஒரே இறைவழிபாடான திவ்ய திருப்பலியில் உயிருடன் பிரசன்னமாகும் இயேசு ஆண்டவரை பயபக்தியோடு ஆராதிக்க மாட்டேன்..
ஜெபமாலை ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன்
இயேசுவின் நற்செய்தியை நானும் அறிந்து கொள்ள விரும்ப மாட்டேன் பிறருக்கும் அறிவிக்க மாட்டேன்,அதை என் வாழ்வாக்கவும் மாட்டேன்.
பிறரன்பு பணிகளில் ஈடுபட மாட்டேன்.அதற்குரிய திட்டங்களை பங்குகளில் செயல்படுத்தவும் விட மாட்டேன்..

இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை எங்கள் தேவையெல்லாம் ஆடல் பாடல் திரையிசை கொண்டாட்டம்.மேளம் மற்றும் வானவேடிக்கை என்ற ஆடம்பர விழாக்கள் மட்டுமே,அதற்காக எந்த சண்டை போடவும் தயங்க மாட்டோம் என சொல்லுகிற அன்பான கத்தோலிக்கர்களே..
இயேசுவின் தூய உடலான, இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபை இது.
அப்போஸ்தலர்கள் மற்றும் சீடர்களின் இரத்தம் சிந்துதினால் வளர்ந்த திருச்சபை இது.
ஆதி திருச்சபையில் ஏற்பட்ட பத்து வேதகலாபனையில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வேதசாட்சிகளின் இரத்தத்தினால் வளர்ந்த திருச்சபை இது.
புனித ஸ்தோவான் முதல் அருளாளர் தேவசகாயம் வரை நூற்றுக்கணக்கில் மறைசாட்சியாக கொல்லப்பட்ட புனிதர்களின் இரத்தத்தினால் வளர்ந்த திருச்சபை இது.
காடு மலை பாராமல், ,ஊன் உறக்கம் இல்லாமல், நாடுவிட்டு நாடு சென்று தங்களை வருத்தி இயேசுவின் நற்செய்தியை அறிவித்த புனித சவேரியார் போன்ற ஆயிரக்கணக்கான மறைபோதகர்களின் சாட்சிய வாழ்வால்,பணியால் வளர்ந்த திருச்சபை இது.
புரிந்துகொள்ளுங்கள்..
[இவர்களின் ஆண்டவர் ஏழையிலும் ஏழையாய், தரித்தரரிலும் தரித்திரராய் வாழ்ந்து, பாடுகள் பலப்பட்டு, கொடூரமாக இரத்தம் சிந்தப்பட்டு, தனது உயிரை இவர்களுக்காக கையளிப்பாராம்,
இந்த ஆண்டவரின் வாழ்வில் ,போதனையில் கவரப்பட்டதால்,பலரும் மறைசட்சிகாளாக இரத்தம் சிந்தி உயிரை விடுவார்களாம்,
,இந்த ஆண்டவருக்கும்,ஆண்டவரின் தாய்க்கும், புனிதர்களுக்கும் விழாக்கள் எடுக்கிறோம் என்ற பெயரில் இவர்கள் ஆடம்பர கேளிக்கை நிகழ்வுகளை நடத்தி,இவர்களே பார்த்து மகிழ்ந்து களிப்பார்களாம்.கேட்டால் எங்கள் ஆண்டவருக்கு விழா எடுக்கிறோம் என்று வாய் கூசாமல் சொல்வார்களாம்.

என்னங்க நியாயம் இது???
No comments:
Post a Comment