Wednesday, June 28, 2017

நீதிபதிகளுக்கு ஆசிரியர்களின் பதில்கள்... 3

அரசின் கொத்தடிமைகள் அல்ல ஆசிரியர்களும், ஆசிரியர்களின் குடும்பத்தினரும். ஆசிரியர்கள் பார்க்கும் வேலைக்கு அரசு ஊதியம் தருகிறது. இலவசமாக எதையும் கொடுக்கவில்லை. கல்வி என்பது தனிமனித உரிமை. யார் எங்கு படிக்க வேண்டும் என்பதை சட்டமோ, அரசாங்கமோ, நீதிமன்றமோ முடிவு செய்ய முடியாது.
ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசாங்கத்திற்கு நேர்ந்து விடப்பட்டவர்களா? அல்லது ஆசிரியர்களின்  பிள்ளைகளை அரசு தத்தெடுத்து வளர்க்கப்போகிறதா?
ஆசிரியர்கள்  என்ன செய்ய வேண்டும்? என்று அரசாங்கம் உத்தரவிடுவதோடு நிறுத்திக்கொள்ளட்டும். ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றி பேசுவதற்கு அரசிற்கோ நீதிமன்றத்திற்கோ  சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது.
6 முதல் 14 வயது பிள்ளைகளுக்கு கட்டாயக்கல்வி என்று சட்டம் போடத்தெரிந்த அரசாங்கத்திற்கு
12ம் வகுப்பு வரை அனைவரும் அரசுப்பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று சட்டமியற்றத் தெரியாதா?
ஆசிரியர்கள் பணியில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம். அதைவிடுத்து ஆசிரியர்களுடைய குடும்பத்தைப்பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ பேசவோ, அவர்கள் கல்வி, வாழ்க்கையை முடிவு செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது.
இது அந்த நீதிபதி பார்க்கும்வரை share செய்யவும்.. 

No comments: