தோழி : - 1 என்னடி காலையிலேயே போண் பண்ணுயிருக்க என்ன விஷயம் ?.
தோழி 2 :- வீட்டில மாப்பிள்ளை பார்க்கலாமுன்னு ரெஜிஸ்டர் பண்ணியிருந்தாங்கடி 😳.நிறைய ஜாதகம் வந்து இருக்கு.அதுல ஐந்து ஆறு பொருத்தமாக இருக்கு.👨🏻👴🏻👨🏻⚕👨🏻💼🤵🏻👨🏻⚖ அதுல எதை செலக்ஷன் பண்ணு றது தெரியல . கொஞ்சம் குழப்பமாக இருக்குடி. 😇😍
தோழி 1 :- அதுல என்ன குழப்பம் ?.
தோழி 2 :- வாத்தியார் ஜாதகம் தான் நிறைய வந்து இருக்கு. அதான் செலக்ஷன் பண்ணு றது கொஞ்சம் ஐடியா சொல்லுடி..😌😒
தோழி 1:- ஓ.கே. ஓ.கே...சொல்லிட்டா போகுது. அவுங்க என்ன போஸ்டிங்ல இருக்காங்கண்ணு மட்டும் சொல்லு.😎🤠
தோழி 2:- முதல் மாப்பிள்ளை நடுநிலை தலைமை ஆசிரியர். 👴🏽
தோழி 1:- ஐய்யய்யோ.இந்த ஆள் கல்யாணம் பண்ணிக்காம இவ்வளவு நாள் என்ன பண்ணுனாரு?. ஸ்கூல் ஸ்கூல் ன்னு மீட்டிங் மீட்டிங்ன்னு ஓடியிருப்பாரு... அதான்.😜😃
தோழி 2:- போட்டோவில் அப்படி தெரியலடி. 😎
தோழி 1:- ஏமாந்து விடாதிடி . பத்து வருஷத்துக்கு முன்னாடியே எடுத்த போட்டோவாக இருக்கும் .👱🏼
தோழி 2:- சரிடி அது வேண்டாம். அடுத்த மாப்பிள்ளை பி. ஆர். டி.. (B.R.T).👨🏻
தோழி 1:- அடியே .நீ என்ன தான் சமைத்தாலும் குறை தானடி சொல்லுவாரு..நல்லா சமைத்து இருக்கிற என்று ஒரு நாளும் பேர் வாங்க முடியாதுடி.அதுமட்டுமல்லடி குழந்தைங்க குரூப்பா உட்கார்ந்து தான் சாப்பிடனுமுன்னு சொல்லுவாருடி. 😄😄😜
தோழி 2:- என்னடி இப்படி சொல்லுற ?.😌
தோழி 1:- ஆமாண்டி. தெரியாம மாட்டிக்காத.
தோழி 2:- சரிடி. அடுத்த மாப்பிள்ளை.கணித பட்டதாரி ஆசிரியர். 👩🏻🌾👨🎓
தோழி 1:-எல்லாத்துக்கும் கணக்கு பார்ப்பாரே.வெங்காயம் கூட எண்ணிப்பார்த்து வாங்கி வருவாரே. பட்ஜெட் மாப்பிள்ளை ஆயிடுச்சே.😜😜
தோழி 2:- அப்போ இதுவும் வேண்டாம். அடுத்த மாப்பிள்ளை ஆங்கில பட்டதாரி ஆசிரியர். 🤵🏻🎓
தோழி 1: - ஓவர் பில்டப் 🤷🏻♂ கொடுப்பாரே .எல்லா எனக்கு தெரியும் என்று சொல்லுவாரு. பெண் ஆசிரியரை பார்த்தவுடன் இங்கிளீஸ்ல விட்டு அடிப்பாருடி .அப்புறம் உன் கதி ஆதோகதிடி.😜😜
தோழி 2:- அப்போ அறிவியல் பட்டதாரி ஆசிரியர். 🙍🏻♂🎓
தோழி 1:- அதுக்கு கல்யாணம் பண்ணிகாமே இருக்கலாம். 😏
தோழி 2:- ஏண்டி .
தோழி 1: - நீ என்ன தான் விதவிதமாக சமைத்து போட்டாலும் ஆராய்ச்சி மையம் அமைத்து ஆய்வு 🐓🦈🐐🌿 பண்ண ஆரம்பித்து விடுவார். உன்னோட லிஸ்டில் இடைநிலை ஆசிரியர் இருக்காரான்னு பாரு. 🙎♂
தோழி 2:- ம் ம்...ம் இருக்காரு ஒருத்தர். அவரு சங்க பொறுப்பில்இருக்காரே..... எப்படி ஒத்து வரும்....?.🤣
தோழி 1: - பரவாயில்லைடி. நீ சொல்லுற லிஸ்டில் இடைநிலை ஆசரியர் தான் நமக்கு ஒத்து வரும்டி.🤝 பாதி நாட்கள் கொடி பிடிக்க போய்விட்டாலும் 🎌🏳 மீதி நாள் சங்கத்தில் மாதிரியே வீட்டிலும் பொறுப்பாக இருப்பாருடி.🏠 எவ்வளவு டார்ச்சர் கொடுத்தாலும் மாலையில் கண்டிப்பாக வீட்டுக்கு வந்து தான் ஆகணும். 😄
கண்டிப்பாக பள்ளி மூடி விடுவார்கள்.😄 வந்தபின் வீட்டில் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்து விடுவார். அதையெல்லாம் தாண்டி இவுங்க தானடி எவ்வளவு டார்ச்சர் கொடுத்தாலும் தாங்கிப்பாங்கடி..😜 பணிக்கு வந்து பத்து பதினைந்து வருடங்கள் ஆனாலும் அம்மா மடியில் இருந்து வரும் குழந்தைகளை அன்போடு பார்த்துப்பாங்க.😜 பணி நிரவல்....கிரீன் சிகினல்.... எவ்வளவு தான் டார்ச்சரை கொடுத்தாலும் தாங்கிக்கிறவங்கடி . ரொம்ப ரொம்ப நல்லவங்கடி ..😃😃😜😜
கண்டிப்பாக பள்ளி மூடி விடுவார்கள்.😄 வந்தபின் வீட்டில் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்து விடுவார். அதையெல்லாம் தாண்டி இவுங்க தானடி எவ்வளவு டார்ச்சர் கொடுத்தாலும் தாங்கிப்பாங்கடி..😜 பணிக்கு வந்து பத்து பதினைந்து வருடங்கள் ஆனாலும் அம்மா மடியில் இருந்து வரும் குழந்தைகளை அன்போடு பார்த்துப்பாங்க.😜 பணி நிரவல்....கிரீன் சிகினல்.... எவ்வளவு தான் டார்ச்சரை கொடுத்தாலும் தாங்கிக்கிறவங்கடி . ரொம்ப ரொம்ப நல்லவங்கடி ..😃😃😜😜
எப்புடி நம்ம ஐடியா. ..
No comments:
Post a Comment