Tuesday, March 27, 2018

ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியே தீர்வோம்!

23வருடங்களுக்குப் பின்னும்-
இன்னும் நாடகம் வேண்டாமடா!
காந்திய வழியில் போராட்டம்-
காப்பது அரசின் கடமை யடா!
கள்ளர் கையில் அதிகாரம்-
காலம் பதில் சொல்லுமடா!
முத்து நகர் புரட்சியாலே-
முதன்மை பெற்றோம் நாமே!
முடி சூடா மன்னர்களாலே-
முன்னேறிச் செல்வோம் நாமே!
முடித்து வைப்போம் ஸ்டெர்லைட்டை-
முத்து நகர் முத்துக்களே!
கண் துடைப்பு நாடகத்தாலே-
காலத்தைக் கடத்த நினக்காதீர்!
விசாரணை என்று சொல்லியே-
வீணாக நாட்களைக் கடத்தாதீர்!
அறிக்கை வரட்டும் என்றே-
அநியாயம் செய்ய நினைக்காதீர்!
அத்தனையும் ஊழல் என்று-
அனைவரும் அறிந்த ஒன்று!
அனைத்தும் விதிமீறல் என்று-
அபராதம் கட்டியது உண்டு!
அழித்திடும் ஆலை என்று-
ஆதாரம் நிறைய உண்டு!
தொழில் வளர்ச்சி ஆலையென-
தொற்று நோயைக் கொண்டுவந்தீர்!
புதிய வேலை வாய்ப்புயென-
புற்று நோயைக் கொண்டுவந்தீர்!
தூத்துக் குடியை அழித்திடவே-
துரத்திய ஆலையைக் கொண்டுவந்தீர்!
விரட்டி அடித்த ஆலையை-
வேண்டும் என்றேக் கொண்டுவந்தீர்!
மக்கள் நலன் என்றுசொல்லி-
மாமூல் வாங்கிட கொண்டுவந்தீர்!
ஆதாயம் அடைந்து வாழ்ந்திடவே-
அபாய ஆலையைக் கொண்டுவந்தீர்!
பொய் சொல்லிப் பிதற்றாதீர்-
பொறுமைக்கு எல்லை உண்டு!
பொங்கி எழுந்து விட்டால்-
பொடிந்துப் போய் விடுவீர்!
பொல்லாப்பு இனி வேண்டாம்-
பொறுப்புடன் நடந்துக் கொள்வீர்!
காசுக்காக பேசிடும் கூட்டத்தை-
கண்டு நெஞ்சு துடிக்கிறதே!
காந்தியம் இன்னும் நினைப்பதாலே-
கைகளும் கட்டுண்டு கிடக்கிறதே!
கண்ணீரில் வாழும் மக்களைப்பார்த்து-
கனத்த மனமும் வெடிக்கிறதே!
குமரெட்டியாபுரம் குழைந்தகள் கூட-
குமுறி அழுவதைப் பார்க்கலையோ?
ஒருதாய் மக்களாய் அனவருமிங்கே-
ஒன்று திரண்டு நிற்கின்றோம்!
உயிர்க் கொல்லி ஸ்டெர்லைட்டை-
உயிரைக் கொடுத்து விரட்டிடுவோம்!
விவசாயி ஜோதிமணி

No comments: