" எனதன்புள்ள மாலுமிகள் ‘’ கவனத்திற்கு .....
மாலுமிகள் குழந்தைகளுக்கான இந்த கல்வி ஆண்டிற்கான (2017 - 2018) உதவித்தொகை ரூ.3000 லிருந்து ரூ.4000, ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். விண்ணப்பங்கள் ஜூன் 1ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
விண்ணப்பங்களை நியூசி NUSI தலைமை அலுவலகத்திலோ அல்லது தூத்துக்குடி நியூசி NUSI கிளை அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளவும்.
தூத்துக்குடி கிளை அலுவலகத்திலிருந்து தூரமாக உள்ள கிராமத்தில் இருக்கும் மாலுமிகள் நலச்சங்க நிர்வாகிகள் , அல்லது நல்ல சேவை மனப்பான்பை உள்ள நல்லவர்கள் முன் வந்து நம் சகோதர மாலுமிகளின் மனைவிகளை அலையவிடாமல் (கப்பலில் இருக்கும் மாலுமிகள்) உதவி மனப்பான்பில் மாலுமிகளின் சீடீசீ எண்ணைப்பெற்று நியூசி NUSI தலைமை அலுவலகத்திற்கு எனக்கு மொத்தமாக அனுப்பினால் எனது வேலைப்பளுவின் இருப்பினும் இந்த உதவியை மனமுவந்து செய்கிறேன்.
தாங்கள் அனுப்பும் விபரங்களை சரி பார்த்து தங்களுக்கு உரிய கல்வி உதவி விண்ணப்பங்களை தங்களுக்கு நேரடியாகவோ அல்லது தூத்துக்குடி நியூசி NUSI கிளை அலுவலம் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். சின்ன கிராமங்களில் உள்ள மாலுமிகள் அல்லது அவர்கள் அவர்கள் குடும்பத்தினர் என்னை நேரடியாக தொடர்புகொள்ளலாம் .
என்னை தொடர்புகொள்ள எண்: 022-43458315. ,
‘’ யாம் பெற்றதை பிறரும் பெருவதே ‘’ எம் நோக்கம்.
எல்.பி.விமல்சன்,
துணைத்தலைவர்,
நியூசி,NUSI ,
மும்பை.
துணைத்தலைவர்,
நியூசி,NUSI ,
மும்பை.
No comments:
Post a Comment