Wednesday, June 14, 2017

GOOD JOKE: STUDENT VS TEACHER

*சிரிச்சே ஆகனும்ங்க*
ஒரு பள்ளி மாணவன் தன் ஆங்கில ஆசிரியரிடம் ஒரு சந்தேகம் கேட்டான்.
சார் ஆங்கிலத்தில்   *'நடுரே'* ன்னா என்ன சார்  அர்த்தம் ?
குழப்பமடைந்த ஆசிரியர்  பிறகு சொல்கிறேன்னு சமாளித்து ஐந்தாறு டிக்சனரியில் அர்த்தம்  தேடித்தேடி ஓய்ந்து போனார்...
பள்ளியில் அவனைக் கண்டால்  காணாதது போல இருந்தார்.
இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் துளைத்து எடுத்தான்....
அர்த்தம் சொல்லுங்க சார்?
அவன் தொல்லை தாங்காத ஆசிரியர்  அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார் .
அவன்  *N A T U R E  [நடுரே]*
என்று சொல்ல
கடுப்பாகி போனவர்
ஏன்டா *'நேச்சர்'*  னு சொல்லாமல் என்ன சாவடிச்சிட்டியேடா நீ... உன்ன டீசி கொடுத்து இந்த ஸ்கூல விட்டே அனுப்புறேன் பார்ன்னு கத்தினார்....
உடனே மாணவன் ஆசிரியர்  காலில் விழுந்து அழுதான்....
சார்.. அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க...
என் *புடுரே*  [ FUTURE ] வீணாயிடும்...!!

No comments: