Wednesday, June 14, 2017

Don't 'copy' if you cannot 'paste' correctly !!!

மிக நகைச்சுவையாக பேசக்கூடிய ஒரு பேச்சாளர் ஒருமுறை உரையாற்றும்போது....
"என் வாழ்வின் சிறந்த நாட்கள்...
இன்னொருவரின் மனைவியோடு செலவழித்த நாட்களே"
பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள்
பேச்சாளர் தொடர்ந்து சொன்னது:
"அது வேறு யாருமல்ல
என் அம்மாதான்.....!
கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.                
இந்த சொற்பொழிவை கேட்ட ஒருவர்
இதை தன்வீட்டில் பரிசோதிக்கவிரும்பி
தன் மனைவிடம் இரவு சாப்பாட்டின்போது இப்படி சொன்னார்
.
அன்பே நான் வாழ்க்கையில் செலவழித்த சிறந்தநாட்கள்;
இன்னொருவரின் மனைவியுடன்.........    
.
.
கொஞ்ச நேரத்தில் அடுத்த வரியை சொல்ல அவர் நினைத்தபோது அவருக்கு நினைவு திரும்பி தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார்
அவரது உடல் முழுவதும் கொதிக்கும் சாம்பார் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தீக்காயத்தில் வெந்து போயிருந்ததை புரிந்துக்கொண்டார்....
     
MORAL LESSON: Don't 'copy' if you cannot 'paste' correctly!
😂😂😂😂
Keep Smiling😊

No comments: