|The WORD|
"பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.." (சங்கீதம் 96:9)
கீழ்க்காணும் அழகுக் குறிப்புக்களை
தவறாமல் உபயோகியுங்கள்.. வாழ்வில், விரைவில் அழகான பலனைக் காண்பீர்கள்..
தவறாமல் உபயோகியுங்கள்.. வாழ்வில், விரைவில் அழகான பலனைக் காண்பீர்கள்..
தினமும் உங்கள் இருதயத்தை மனந்திரும்புதலினால் சுத்திகரித்துக் கொள்ளுங்கள்.. அழகுக்கு சுத்தமே முதல் தேவை.
பரிசுத்த குளியல்...வெறும் நீரில் அல்ல, தேவவார்த்தையிலே.. மூழ்கிக் குளித்திடுங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். ஜீவத்தண்ணீர் அல்லவா அது..
சுருக்கங்கள் வராமல் இருக்க, மன்னிப்பை உபயோகப்படுத்திப்பாருங்கள். அது கசப்பையும் அகற்றும்.. இருதயம் அழகாகும்..
ஈரப்பதத்தை குறையாமல் தக்க வைத்துக் கொள்ள, "ஜெபமே" சிறந்த காரணி. வறண்டுபோன தன்மையுள்ளோர், வறட்சி மாற அடிக்கடி, நேரம் கிடைக்குப்போதெல்லாம் பயன்படுத்துங்கள்.
அன்பெனும் இனிமையான வாசனை திரவியத்தை சற்று உங்கள் மேல் தெளித்துக் கொள்ளுங்கள். அது அதிகரிக்க, அதிகரிக்க, சுற்றுப்புறத்தையே அழகாக்கும்.
இன்னமும் உங்கள் அழகை மெருகூட்ட, பொறுமையை சற்று அதிக அளவிலே சேர்த்துக் கொள்ளுங்கள்.
கவலையும் கோபமும் இச்சையும் அருவருப்பான சூழலுக்கு அடித்தளங்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற்கொள்ளுங்கள்.
வயதின் தாக்கத்தைக் குறைத்து, என்றும் இளமையாய் உங்களை மிளிர வைக்க, விசுவாசமே நல்மருந்து.
உங்கள் முகம் மிகச் சிறந்த பொலிவுடன் விளங்கிட, எப்பொழுதும் ஓர் புன்னகையை அணிந்து கொள்ளுங்கள். பொன் நகையைக் காட்டிலும் புன்னகை இன்னும் உங்களை அழகூட்டும்..
"பைபிள்" எனும் கண்ணாடியைக் கூடவே வைத்துக்கொண்டால், அவ்வப்போது அகம் பார்த்து சீர்செய்துகொண்டால், அழகோ, அலங்காரமோ எப்போதும் குறையாது.
சீக்கிரமா அலங்காரம் பண்ணிட்டு தேவசமூகம் வாங்க.. கர்த்தரைத் தொழுவோம்.. ஆமென்
_______________________
_______________________

No comments:
Post a Comment