Thursday, June 15, 2017

What happens when you pray and not....


*ஜெபம்*

நாம் முழங்காலில் நின்று ஜெபிக்கும் போது சாத்தானின் சேனை நடுங்குகிறது.
இந்த கடைசி நாட்களில் அதிகபாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.

நாம் ஜெபிக்கும் போது சாத்தானின் சதிகள் மற்றும் அவனின் திட்டங்கள் முறியடிக்க படுகிறது. தேவ ஜனங்கள் மற்றும் தேவ ஊழியர்கள் பாதுகாக்க படுகிறார்கள்.

இதை அறிந்த சாத்தான் ஜெபிக்கும் தேவ பிள்ளைகளை தடை செய்ய தந்திரங்களை செய்வான். அவை எவையெல்லாம் என்று பார்ப்போம்.

1. தாழ்வு மனப்பான்மை கொண்டு வந்து நீ பாவி ஜெபிக்காதே என்பான்.
2.பயத்தை கொண்டு வந்து அவிசுவாசத்தை ஏற்படுத்துவான்.
3.உலக கவலை மற்றும் பிரச்சனைகளை நியாபக படுத்தி ஒரு மனதோடு ஜெபிப்பதை கெடுப்பான்.
4.சுயநலவாதியாக ஜெபிக்க வைத்து ஆத்தும பாரத்தோடு ஜெபிப்பதை நிறுத்துவான்.
5.உடல் களைப்பை கொடுத்து தூங்க வைத்து விடுவான்.

*நாம் ஜெபிக்கும் போது இறைவன் என்னசெய்கிறார் என்று பார்ப்போம்*

1.நாம் முழங்கால் போட்டதும் நம் அருகில் வந்து நின்று ஜெபிப்பதை கேட்பார்.
2.தேவ தூதர்கள் வருவார்கள் நாம் ஜெபிப்பதை அவர்கள் எழுதிக் கொண்டே இருப்பார்கள்
3.ஆவியானவர் நமது பெலவீனங்களில் உதவி செய்கிறார்
4.ஆவியானவரும் நம்முடன் சேர்ந்து விண்ணப்பம் பண்ணுகிறார்
5.நாம் ஜெபிக்கும் போது பரலோகம் சந்தோஷப்படுகிறது.
6.ஞாபக புத்தகத்தில் நீங்கள் ஜெபிப்பது எழுதப்படும்
7.வருங் காரியங்களை தேவன் அறிப்பார்.
8.தேவன் நம்மோடு பேசுவார்.

*எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.*

1 பேதுரு 4:7

அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, *எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்*

அப்போஸ்தலர் 10:2


No comments: