Friday, August 18, 2017

ஆகஸ்டு 22, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்...


எனதருமை ஆசிரியர்களே!!
ஆகஸ்டு 22 போராட்டத்திற்கு தயாராகி விட்டீர்களா??
ஓய்வு பெற்றபின் மூன்றுவேளை உணவு!!
உடுத்துவதற்கு ஆடை!!
மருத்துவச்செலவுக்கு
கொஞ்சம் சேமிப்பு!!
அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல்??
சொந்தப் பணத்தில் கவுரவமான வாழ்க்கை!!
இதற்காகவாவது
போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்!!!
CPS ஆசிரியர்கள்!
TPF ஆசிரியர்கள்!!
மூத்த ஆசிரியர்கள்!!
இளைய ஆசிரியர்கள்!!
எல்லோரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
கலந்துகொள்வோம்!!
விதிவிலக்கு கேட்காதீர்கள்!!
வீதிக்கு வந்து போராடுவோம்!!
வெற்றி கிடைக்கும்வரை
போராடுவோம்!!!
நமக்கான போராட்டத்தில்
ஒன்றுபட்டு போராடுவோம்!!
நாளைய வெற்றியில்
நமது பங்கு!!
முழுமையாக இருக்கட்டும்!!
வரும் வாரம் முழுவதும்
ஊடகங்களில் போராட்டச் செய்திகளை மட்டுமே பகிர்வோம்!!
காலை மாலை இரவு வணக்கங்களைத் தவிர்ப்போம்!!
வேலைநிறுத்தப் போராட்ட முழக்கங்களே
வாட்ஸ்ஆப்பையும்!
முகநூலையும்!
டிவிட்டரையும்!
ஆக்கிரமிக்கட்டும்!!!
உணர்வுப்பூர்வமான போராட்ட செய்திகளை!!
ஒவ்வொருவரும் பரப்புவோம்!!!
ஓய்வூதிய வரலாற்றை அறியச்செய்வோம்!!
CPS திட்டத்தின் பாதிப்புகளை பரப்புரை செய்வோம்!!
போராட்டக்களத்திற்கு அனைவரையும் தயார்செய்வோம்!!!
போராடுவோம்!!
வென்று காட்டுவோம்!!!   
அனைத்து ஆசிரியப் பெருமக்களும் அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம்.  இப்போது தவற விட்டால்?     
தயக்கம் தேவையில்லை. எல்லோரும் விடுப்பு கொடுத்து விட்டு பக்கத்தில் உள்ள வட்டாட்சியர் அல்வலகத்தில் கூடி ஆர்பாட்டம் செய்வோம். 10 மணி முதல் 12 மணி வரை ஆர்பாட்டம் நடைபெறும்.
வட்டார அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் | வருவாய் துறை |  மருத்துவத்துறை 'நெடுஞ்சாலை, 
தொL க்கப் பள்ளி | உயர் நிலை | மேல்நிலை என 24 சங்கங்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். பல்வேறு அரசு நிறுவனங்கள் அன்று முழு ஆதரவு தர உள்ள நிலையில் இந்த மிகப் பெரிய போராட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம்.
22ம் தேதியே நல்ல செய்தி காத்திருக்கிறது. CPS ஐ நீக்க ,  
புதிய ஊதிய குழு அமைக்க,
20 % இடைக்கால நிவாரணம் பெற இது வே சரியான நேரம்.
     நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் .
           போராட்ட களப்பணிகள் மிகச் சிறப்பாக  உள்ளது என்பதனை பறைசாற்றும் விதமாகவே மதிப்புமிகு தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் ஆணை (No work - No pay )  இருக்கின்றது , அதாவது போராட்ட களத்தை பிசுபிசுக்க இது போன்ற அறிக்கைகளை ஒரு நாள் முன்னதாக வெளியிடும் அரசு இப்போது 5 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடுகிறது என்றால் களப்பணியில் நமது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆற்றி வருகின்ற பணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருத வேண்டும் .
            போராட்ட களம் இது போன்ற அறிவிப்புகளை கண்டு தொய்வடையாது , களப்பணிகளை மேலும் தீவிர படுத்திட வேண்டுகிறோம்.
          சிந்திப்பீர் !! ஒரு நாள் ஊதியமா  , தன்மானத்தோடு வாழ்ந்திட ஓய்வூதியமா !!!
         நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
        நமது உரிமைகளை மீட்போம் .
      
அந்தந்த வட்டாரத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்.
             
          இவன்
பெ.இளங்கோவன்  & ஜெ.கணேசன்
    தொடர்பாளர்கள்                        ஜாக்டோ - ஜியோ    (JACTTO - GEO ).

No comments: