Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 25

இன்சூரன்ஸ், ரெயில்வே தனியார் மயமாயிட்டிருக்கு. அவன் என்ன நினைக்கிறான் ''ரெயில்வேயில 18 லட்சம் அரசு ஊழியர்கள். எதுக்கு? வெறும் 4 லட்சம் போதாதா? தூக்கி வீட்டுக்கு அனுப்பு''. யாரை? தெண்டச்சோறு தின்னுட்டு சும்மா சுத்திட்டு வரவனை அனுப்பலாமா? நிச்சயமா மாட்டேன்னுவாங்க. அவனோட டார்கெட்டே நாமதான். அதனாலதான் சேவைதுறையில் கை வைக்கிறானுங்க. அங்கேதான் நம் மக்கள் அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். அதனால்தான் நம் மக்களுக்காக ''skill developement'' தயார் பண்ணிட்டாங்க. என்ன ட்ரெய்னிங்? எலக்ட்ரிசியன், பிளம்பர், ஏ.சி. மெக்கானிக், டிரைவர், டெய்லர், மொபைல் மெக்கானிக்கென்று இப்படிப்பட்ட சேவைப்பிரிவுகளில் நம் குழந்தைகள் அலங்கரிக்க போகின்றன. இது நமக்கு சந்தோசம் தருதா? எப்படியானாலும் நம் சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் எல்லாம் இப்படிப்பட்ட வேலைகளில்தான் இருப்பார்கள். இந்த ஊழியர்கள் நிலை என்ன? கியாரண்டி கிடையாது. 102 வருட போராட்டத்தில் பெற்ற உரிமைகள் இந்த 5, 6 வருடங்களில் நம் கண்முன்பே பறிபோவது நமக்கே தெரியாது.
இப்பொழுது நாம் என்ன பண்ணலாம்? தலித் அமைப்புகள், சங்கங்கள் உருவாகியாச்சு, போராட்டம் செய்தாச்சு, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டும் போட்டாச்சு. ஏன் இந்த 65 வருஷத்தில் என்னென்ன கட்சியிருக்கோ அவ்வளவுக்கும் போட்டாச்சு. இனி என்ன செய்யலாம்? அதாவது பாபாசாகேப்பின் சட்டத்தை நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம்?

அரசியல் அதிகாரம் கையில் வந்தால், நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்பது நமக்கு தெரியும். அந்த அரசியல் அதிகாரத்தை நம் கையில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்? அதாவது பாபாசாகேப் பாதையை காட்டி விட்டார். அது என்ன? ''நமக்கான தேசிய கட்சி, நமக்கான தேசிய தலைவர், ஒரே கொள்கை'' என்பதை தெளிவுபடுத்திட்டார். அதற்காக குடியரசு கட்சியை உருவாக்கினார். தேசிய தலைமை யார்? ''ஐயா, நீங்கதான்''. ''ஓ.கே. பைன்''. கொள்கை என்ன? 1. சமூக மேம்பாடு 2. பொருளாதார மேம்பாடு. எல்லாம் சரி. அடுத்ததா இந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். பாபாசாகேப் கூடுதலாக 2 வருடம் உயிரோடிருந்தா குடியரசு கட்சியானது மக்களை ஒருங்கிணைத்து, வெற்றியுடன் ஆட்சி அமைத்திருக்கும். சட்டத்தை நடைமுறைப்படுத்தி சமூகமும், பொருளாதாரமும் மேலே வந்திருக்கும். ஆனால் நமது துரதிர்ஷ்டம் அவர் டிசம்பர் 6ம் தேதி இறந்து விடுகிறார். சரி. அவர் உருவாக்கிய கட்சி என்னவானது? எந்த அரசு ஊழியர்களை கொண்டு ஆட்சியை பெற முடியும் என்று நம்பினாரோ அந்த அரசு ஊழியர்களோ, ரிசர்வேசன் வாங்கினார்கள், தங்கள் குடும்பத்தை பார்த்தார்கள், தங்கள் வீட்டை கட்டிக் கொண்டு போய்விட்டார்கள். அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. S.c-s.t. அசோசியேஷன் தொடங்கி அதனால் இந்த சமூகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்கள். சமூகத்திற்கு யார் வழிகாட்டுவாங்கன்னு பார்த்தா, நிச்சயமா தலித் அமைப்புதான். ஆனால் இந்த தலித் அமைப்பை யார் உருவாக்கினாங்கன்னு பார்த்தா, அது நிச்சயமா நீங்க இல்லை. இதை ஒரு குரூப் புனேயில் உட்கார்ந்து பிளான் பண்ணுனாங்க. ஒட்டுமொத்த தலித் அமைப்பையும் உருவாக்கினது R.S.S. காரனுங்கதான்.

ஆக அரசு ஊழியர்களே போயாச்சு. இப்படி அரசு ஊழியர்கள் நேர்மையில்லாது போனதால இன்னிக்குமே மக்களுக்கு வழிகாட்டி என்று யாருமே இல்லை. எப்படி புத்த பிக்குகளை அழித்து, நம் பெளத்தத்தை திக்குதெரியாமல் விட்டார்களோ, இப்படி அம்பேத்கர் பேரை மட்டும் வைச்சிட்டு, இவனுங்க அசோசியேஷன் வேலையை மட்டும் பார்த்திட்டிருந்தா, நாம இவர்களை வைத்தே கூட ஆட்சி பண்ணலாம் என்ற பிளானில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் ''S.C., S.T. DALIT PANTHERS'' என்று மகாராஸ்ட்ராவில் முதல்முறையா உருவானது. இதன் கண்ட்ரோலே R.S.S.தான். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே ''பாபாசாகேப் வழியில் போகக்கூடாது'' என்பதுதான். குறிப்பா, ''அரசியல் அதிகாரத்தை நோக்கி போகக்கூடாது''. அதைப்போல தமிழகத்திலும் இது போன்ற அமைப்புகள் உருவாக்கி தி.மு.க., அ.தி.மு.க. வை வளர்த்தது. பின்னர் அந்த கட்சியிடமே 1 சீட், 2 சீட்டுக்கு போய் நின்றது. எவனுக்கோ ஓட்டு போட்டு என் பாட்டனுங்க கொத்தடிமையா இருக்கறதை பார்த்து, நான் போய் தலித் தலைவர் பின்னாடி நின்னா, அவனே போய் அந்த கொத்தடிமையை உருவாக்கும் கட்சியிடம் போய் 1 சீட்டுக்கும், 2 சீட்டுக்கும் என் ஓட்டை அடகு வைத்து  நின்றால், என் கதி என்னாவது? சரி இதையெல்லாம் சரி செய்ய வேண்டியது யார்? நிச்சயமா அரசு ஊழியர்கள்தான். ஆனா இவங்க 'என் புரமோசன், டிரான்ஸ்பர், என் பிள்ளை, குடும்பம்''ன்னு சுயநலமா இருக்காங்க. இதைப்போல 3% உள்ள பார்ப்பானுங்க இருந்திருந்தா, அவனால இன்னிக்கு ஆட்சி நடத்த முடியுமா?

தொடரும்

No comments: