கனவுகள் இல்லாத கண்களும் இல்லை,
உணர்வுகள் இல்லாத உயிர்களும் இல்லை,
பிரிவுகள் இல்லாத உறவுகளும் இல்லை,
காதல் இல்லாத இதயமும் இல்லை...
ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் சிறிதளவே வித்தியாசம் உள்ளது...
ஆனால் அச்சிறு வித்தியாசமே மிகப்பெரிய மாற்றத்தை அவரவருக்குள் தருகிறது...
அந்த சிறு வித்தியாசம் தான் அவரவர்களுக்கு உள்ளே இருக்கும் எண்ணங்கள்...
ஆம், நம் எண்ணங்களே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது...
மற்றவரின் புன்னகையை ரசிப்பதை விட,
அவர்களை புன்னகைக்க வைத்து ரசித்துப்பாருங்கள்...
வாழ்வே வசந்தமாகும்...
எல்லோருக்கும் பிடித்த மாதிரி நான் இருக்கணும்னு இறைவனிடம் வரம் கேட்டேன்...
அவர் சிரிச்சுகிட்டே சொன்னார், "எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கல..!!"
பிறரது குறைகளை பார்க்கும் கண்களும்...
பிறரது குறைகளை பேசும் நாக்கும்...
பிறரது குறைகளை கேட்கும் காதுகளும்...
பிறரது மனதை நோகடிக்கும் செயல்களும்...
நம்மிடம் இருந்தால்
நம்முடைய மனம் தான் முதலில் மாசுபடுகின்றது...
என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்...
நான் உன்னை தடுக்கமாட்டேன்...
ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்...
அங்கே உனக்காக நான் இருப்பேன்...
அப்போதும் நல்ல நண்பனாய்..!!
ரோஜா போல் அழகாக பூத்திருக்கு புதிய நாள்...
சுறுசுறுப்பாக மனதை வைப்போம்...
உற்சாகமாக உடலை வைப்போம்...
இன்றைய பொழுதை இனிய பொழுதாக மலர வைப்போம்... நம் சிந்தனை சிறகுகளால்..!!
சந்தோஷம் என்பது பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ்றது இல்ல...
எவ்வளவோ பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு வாழ்றது...
சுமைகளை சுமக்க தெரிந்து கொண்டால் சுமைகளும் சுலபம் தான்
அது போல்
சாதிக்க பழகிவிட்டால் தடைகளும் சவால் தான்
எவன் ஒருவன் தனக்குஉள்ள கெளரவம்,மரியாதை போய்விடும் என பயந்தபடி இருக்கிறானோ...
அவனே அவமானத்தை அடைகிறான்....
உன் மனமே உன் கட்டுப்பாட்டில் இல்லையெனில்
உலகில் யார் மனதை உன்னால் கட்டுப்படுத்த இயலும்...
மனிதன் என்ற பெயர் நிதானத்தினால் கிடைக்கின்றது...
மகான் என்ற பெயர் தியானத்தினால் கிடைக்கின்றது...
குரு என்ற பெயர் கவனத்தினால் கிடைக்கின்றது...
நிதானம், தியானம், கவனம் என்ற மூன்றும்
இருப்போருக்கு முக்தி கிடைக்கின்றது...
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment