நம்முடைய பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர்
பண்டித ஜவஹர்லால் நேரு குழந்தைகள்மீது மிகுந்த அன்போடு இருந்தவர்;
குழந்தைகளுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும்,
அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் களையப்படவேண்டும் என்றும்
தன்னுடைய குரலைப் பதிவு செய்தவர்.
அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.
அவர் வாஷிங்டனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தபோது,
அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் எவ்வளவு பெரிய நகைச்சுவைக்கும் சிரிக்கமாட்டார்,
எப்போது பார்த்தாலும் முகத்தை உம்மென்று வைத்திருப்பார் என்னும் செய்தி சொல்லப்பட்டது.
உடனே நேரு அந்த மாணவரைப் பார்ப்பதற்காக அவர் இருந்த வகுப்பறைக்குச் சென்றார்.
அங்கே முன்வரிசையில் குறிப்பிட்ட அந்த மாணவர் அமர்ந்திருந்தார்.
நேரு அந்த மானவரிடத்தில் எதுவும் பேசவில்லை, மாறாக,
தன்னுடைய சட்டைப் பையிலிருந்து சீப்பை எடுத்து,
அதனை தன்னுடைய சொட்டைத் தலையில் வைத்து வாரினார்.
நேரு செய்த செயலைப் பார்த்து, அந்த மாணவர் மட்டுமல்ல, வகுப்பறையே சிரித்து மகிழ்ந்தது.
நேரு பாரத தேசத்தின் பிரதம மந்திரியாக இருந்தாலும் குழந்தைகளைக் காணும்போதெல்லாம் குழந்தையாகவே மாறியது அவரிடமிருந்த தனிச் சிறப்பாகும்.
No comments:
Post a Comment