Tuesday, August 8, 2017

இந்தியாவில் இயேசுவின் அப்போஸ்தலர்...   

🍊இந்தியாவிற்கு இருக்கும் பல்வேறு சிறப்புகளில் இதுவும் ஒன்று, இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவராகிய அப்போஸ்தலராகிய தோமா இந்தியாவிற்க்கு வந்து நற்செய்தி அறிவித்தார் .இங்கேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் .
🍊எனவே கிறிஸ்தவ மதம் ஆங்கிலேய ஆட்சியின் போதல்ல,  முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்துவோடிருந்த சீடராலேயே அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் .
🍊இந்தியாவில் தோமா( St . Thomos) அவர்கள் வாழ்ந்த நாட்களில் அவர் மூலம் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களால் இந்து மதத்தில் உயர்குலமாக எண்ணப்படுகிற மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் .
🍊இதற்கு பின்னணியாக இருந்த அற்புதங்களில் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
🍊கேரளாவில் பாலையூர் என்னுமிடத்தில் இந்துக்களுக்காக பிரத்யேகமான இடத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது .
🍊அதிலே ஸ்நானம் பண்ணுவதற்கு நம்பூதிரி பிராமணர்களில் சிலர் வந்தனர்.
🍊அவர்களிடத்தில் தோமா கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார் .அங்கே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது .
🍊அப்பொழுது தோமா அவர்களிடம் நீங்கள் தண்ணீரை அள்ளி அள்ளி வீசி பூஜிக்கிறீர்களே அப்படி நீங்கள் அள்ளி வீசுகிற தண்ணீர் ஆகாயத்தில் அப்படியே நிற்க வேண்டும் .கீழே விழக் கூடாது.
🍊அப்படி நடந்தால் நீங்கள் கடவுள் என்று சொல்பவரை நான் ஏற்றுக்கொள்கிறேன் .
🍊அப்படி உங்களால் முடியாதென்றால் அதை நான் செய்கிறேன். அப்பொழுது நான் சொல்லும் இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னார் .
🍒சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
🍊நம்பூதிரி பிராமணர்கள் தண்ணீரில் இறங்கினார்கள். வேத சாஸ்திரங்களை சொல்லி வாரி இறைத்தார்கள்.
🍊ஆனால் எத்தனை முறை முயன்றும் வாரி இறைந்த நீர் மேலே போன வேகத்தில் கீழே இறங்கியது .சோர்ந்து போய் கீழே இறங்கினார்கள் .
🍊இப்பொழுது தோமாவின் வேளை ,தண்ணீரில் இறங்கினார்.
🍊கர்த்தாவே நீரே உண்மையான கடவுள் என்பதை இந்திய மக்கள் விசுவாசிக்கும் படி இப்பொழுது இந்த அற்புதத்தை செய்தருளும் என வேண்டி தண்ணீரை அள்ளி மேலே வீசினார் .
🍀என்ன ஆச்சரியம் !!
🍊வீசப்பட்ட தண்ணீர் வெட்டவெளியில் காகித திரைபோல் நின்றது .
🍊மக்கள் பார்த்து அதிசயித்தனர்.பிறகு அந்த காகிததிரை நீர் துளிகளாக மாறி மலர்களாக உருவெடுத்து தண்ணீரில் விழுந்தன .
🍊அது மட்டுமல்ல, தோமா கைவைத்து தண்ணீர் எடுத்த இடம் குழியாக விழுந்தது. அலை அடித்த பொழுதும் அந்த தடயம் மாறவே இல்லை .
🍊இதை கண்ட ஏழு நம்பூதிரி  குடும்பத்தினரும் அதே குளத்தில் தோமாவினிடத்தில் ஞானஸ்தானம் பெற்று இயேசுவின் சீடரானார்கள் .
🍊அதன் பிறகு அந்த குளம் வெட்டாந்தரையானது .மக்கள் அதை சாபக்காடு என்றனர் .அது நாளடைவில் மருவி சவக்காடு என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது .
🌞இது உண்மை சரித்திரம்
🌾PRAISE THE LORD ⛪

No comments: