Tuesday, August 8, 2017

உண்மையான பிக்பாஸ் நிகழ்ச்சி...

*உண்மையான பிக்பாஸ்* நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.
இந்த உலகம் எனும் வீட்டில் உலவ விடப்பட்டிருக்கிறோம் நாம் அனைவரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இறைவனால் தரப்பட்டிருக்கிறது. இந்த வீட்டில் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பது இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறது.
நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. தினமும் சிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேற்றப்படுகின்றனர். சிலர் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். எங்கும் எதையும் இறைவனிடமிருந்து மறைக்க முடியாது. ஆனால் மறைத்து விட்டதாய் நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம்.
மறைக்காவிட்டால் என்ன ? பிக் பாஸ் என்ன செய்து விட முடியும் ? எனும் தெனாவெட்டில் சில வேளைகளில் நமக்குப் பிடித்தமானபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பிக் பாஸ் வந்து நிற்கும் போது அவர் நமது செயல்களை வெளிப்படுத்துவார். 'நான் அப்படியெல்லாம் செய்யலையே' என தப்ப முடியாது. காரணம் இறைவனின் கண்கள் பூமியை எப்போதும் நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கின்றன.
"நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். ( 2 கொரி 5 : 10 ) என மிகத் தெளிவாக சட்ட திட்டத்தை வரையறை செய்துமிருக்கிறார் பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிக்கை மணி !
இறைவன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கதாபாத்திரங்கள் நாம் என்பதை உணர வைத்த ஒரு எச்சரிக்கை மணி !
இந்த வீட்டில் எப்படி வாழவேண்டும் என எழுதப்பட்ட‌ வாழ்க்கை வரைமுறைகள் அடங்கிய நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் பைபிள்.
எப்படி வாழவேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாய் வாழ்ந்து காட்டிய‌ வெற்றியாளர் ஒருவர் உண்டு, அவர் பெயர் இயேசு !
இரண்டையும் பற்றிக் கொண்டால், நமக்கு வெற்றி நிச்சயம்.
கிடைக்கப்போகும் பரிசு காகிதப் பணம் அல்ல !
அழியாத விண்ணக செல்வம் !!!
தயாராவோம் வாங்க, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு !

No comments: