🎇ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....
🎇நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...
🎇திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,
🎇இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...
🎇சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....
🎇 இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......
🎇அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும்! நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...
🎇மருமகள் காபியை கொண்டு சென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....
🎇பின் கணவனுக்கு பறிமாறல், கை கழுவ தண்ணீர் தருதல், அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு, எப்போதும் மகனுடனே இருப்பது, மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....
🎇இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது, கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......
துணி துவைப்பது, காத்திருப்பது, கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......
🎇அவன் என் மகன், முதல் உரிமை எனக்குதான், என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....
🎇என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......
🎇அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது இதை எப்படி சரிசெய்வது?....
🎇இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....
🎇திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......
🎇அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....
🎇ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....
🎇இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...
🎇Possessivenessம் அடிப்படையில் அளவுக்கதிகமான அன்புதான்....
🎇அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....
🎇பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......
🎇அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....
🎇அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன் அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....
🎇உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....
🎇உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
Ganash Kumar Ganashkumar
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
Ganash Kumar Ganashkumar
No comments:
Post a Comment