அன்பு மடல்!
August 20th,
August 20th,
"ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்"
எசாயா 62 :3
எசாயா 62 :3
"ஒரு கூடைபந்து என் கரத்தில் இருக்கும்போது, அது 19 டாலராகத்தான் இருக்கும், அதே கூடைபந்து, மைக்கேல் ஜோர்தானின் கரத்தில் இருக்கும்போது, 33 மில்லயன் டாலர் மதிப்புள்ளதாக இருக்கும்."
"ஒரு கிரிக்கெட் மட்டை என் கையில் இருக்கும்போது, அதற்கு 200 ரூபாய் மட்டுமே அதன் மதிப்பு. அதே மட்டை சச்சின் டெண்டுல்கரின் கரத்தில் இருக்கும்போது அதற்கு எத்தனையோ ஆயிரங்கள் மதிப்பு."
"ஒரு எழுதுகோல் என் கரத்தில் இருக்கும்போது, அது எனது வாழ்நாளுக்கு தேவையான காரியங்களை எழுத மட்டுமே பயன்படும். அதே எழுதுகோல் ஷேக்ஸ்பியரின் கரத்தில் இருந்தபோது, காலத்தால் அழியாத காவியங்களை படைக்க முடிந்தது."
ஒரு கோல் என் கரத்தில் இருக்கும்போது, அது காய வைத்திருக்கும் உணவு பொருளை சாப்பிடவரும் காகங்களையும், பறவைகளையும் விரட்டி அடிக்கும், ஆனால் அந்த கோல் மோசேயின் கரத்தில் இருந்தபோது, அது கரைபுரண்டு ஓடும் சிவந்த கடலை இரண்டாக பிரிக்க வல்லமையுள்ளதாக இருந்தது.
ஒரு கவண்வில் என் கரத்தில் இருக்கும்போது, அது ஒரு விளையாட்டு பொருளாகத்தான் இருக்கும். ஆனால் அது தாவீதின் கரத்தில் இருந்தபோது, தேவனை எதிர்த்து நின்ற ஒரு அரக்கனை கொன்று போட வல்லமையுள்ளதாக இருந்தது.
ஐந்து அப்பமும் இரண்டு மீனும் என் கரத்தில் இருக்கும்போது, அது எனக்கு சாப்பிட ஒரு வேளை உணவு மட்டுமே. ஆனால் அது இயேசுவின் கரத்தில் இருந்தபோது, ஆயிரமாயிரமான பேருக்கு பசியை போக்க வல்லதாயிருந்தது.
ஒரு ஆணி என் கரத்தில் இருந்தால், அதினால் ஒரு காலண்டரை மாட்ட முடியும். ஆனால் அதுவே ஆண்டவர் இயேசுவின் கரத்தில் பாய்ந்திருந்தபோது, மனிதக்குலத்திற்கே மீட்பை உண்டு பண்ணிற்று.
"ஆகவே யாருடைய கரத்தில் இருக்கிறதோ அதை பொறுத்து காரியங்கள் வாய்க்கும்."
உங்கள் வாழ்க்கை யாருடைய கரத்தில் இருக்கிறது? ஆண்டவருடைய கரத்திலா? உலகத்தினரின் கரத்திலா? சாத்தானின் கரத்திலா? ஆண்டவருடைய கரத்தில் இருந்தால், ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய் [எசாயா 62 :3]என்ற வசனத்தின்படி ஆண்டவர் நம்மை மாற்றுவார்.
உலகத்தின் கரத்தில் இருந்தால், அவர்கள் உங்களை தங்கள் தேவைப்படி உபயோகித்து, பின்னர் தூக்கி எறிந்து விடுவார்கள். சாத்தானின் கரத்தில் இருந்தால், தனது இஷ்டப்படி அவன் உங்களை ஆட்டுவிப்பான். நம்மை ஆசீர்வதிக்கும் ஆண்டவர் கரத்தில் நம்மை அர்ப்பணிப்போமா?
No comments:
Post a Comment