ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களின் வேத புத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம்.
இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. ஒருபோதும் மறுக்கவும் மாட்டார்கள்.
அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறார்.
அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறார்.
எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம்? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.
“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார்.
அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை?’ என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார்.
நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”
(கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)
கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறார் கோல்வாக்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறார்.
இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். இவர்கள் தான் சாதிய அமைப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்று சொன்னால் நம்மால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
இவர்களுக்கு என்று ஒரு வழிமுறை உண்டு. அதுதான் மூளைச் சலவை.
தங்களது கொள்கைகளை அப்பாவி பாமர மக்களிடையே எடுத்துச் செல்லும்போது அதை நியாயப்படுத்த வேண்டி பல குறுக்குவழிகளை கையாளுகிறார்கள். அவர்களது குலத்தொழில் முறையை அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் மீது திணித்து அதை கடவுளை வணங்குவதற்காக என்று கூறி மூளைச்சலவை செய்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் இதோ கோல்வால்கர் எழுதியது:-
“வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே - நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர்.
“வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே - நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர்.
நான்கு சமூகப் பிரிவுகளும் - அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.
‘பிராமணர்கள்’ தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள். ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள். வாணிபம் விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது.
இது ஒரு சமூக அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்” என்கிறார் கோல்வாக்கர். (Bunch of Thoughts 8-வது அத்தியாயம் பக் - 107-108)
சமுதாயத்தில் அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்து எடுத்து ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது.
வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கக் கூடிய மனுஸ்மிருதியை பற்றி இவர்கள் கூறும்போது
அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது எவ்வளவு பெரிய துரோகம்...
ஆர்.எஸ்.எஸ் என்பது சாதிய அமைப்பிற்கு எதிராக போராடும் இயக்கம் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்? அவர் எழுதிய ஆர்.எஸ்.எஸ் வேதநூல் சாதி அமைப்பை எப்படி பச்சையாக ஆதரித்து எழுதுகிறது என்பதை இதோ பாருங்கள்.
“வடமேற்கு - வடகிழக்கு பகுதிகளை முகம்மதியர்கள் மிகச்சுலபமாக வென்று விட்டார்கள். அதற்கு காரணம் அந்தப் பகுதிகளில் புத்தமதம் சாதி அமைப்பை முறையை தகர்த்து பலவீனப்படுத்தியதுதான். ஆனால் அதற்கு நேர்மாறாக டில்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும் இந்து மதம் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகும் உறுதியாக ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு காரணம் இந்த மாநிலங்களில் சாதி அமைப்பு முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டதுதான்.”
'History proves that Mohammedans could win over the northwest, northeast are easily where Buddhism has shattered the pattern of the caste system. But contrary to this, the Hindu religion was strong in Delhi and Utterpradesh despite Muslim rule because the caste system was strictly followed there'
(Bunch of thoughts நூலிலிருந்து)
அந்த நூலில் கோல்வாக்கர் மேலும் எழுதுகிறார், “சிலர் நீண்டகாலமாக சாதி அமைப்பு முறையை எதிர்த்துக் கொண்டே வருகிறார்கள். பழங்காலத்தில் சாதி அமைப்பு முறை இருந்தது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால் இச் சாதி அமைப்பு முறை நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
உண்மையில் இந்த சாதி அமைப்பு சமூகத்தில் ஒற்றுமையை காப்பதற்கே உதவி செய்திருக்கிறது”
(There is nothing to prove that the caste system ever hinderedout social development. Actually the caste system has helped to preserve the unity to our society)
(Bunch of thoughts நூலிலிருந்து)
இந்து மதத்தின் ஒற்றுமையை குலைப்பவர்களின் பட்டியலில் சாதி அமைப்பு முறையை எதிர்ப்பவர்களும் வருகிறார்கள். ஆனால் நடுநிலையாளர்கள் சராசரி இந்துக்கள் இந்த சாதி அமைப்பு முறையை எதிர்க்கிறார்கள்.
இந்த சாதி அமைப்பு முறையால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இதைப்பற்றி எடுத்துச் சொல்லும்போது அவர்களை மிக எளிதாக விலக்கி விடுகிறார்கள்.
No comments:
Post a Comment