மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்ற கணவர்!
👉 *நடந்தது என்ன?*
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். *பெரிய பெரிய கற்களைக்* காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் *கற்களால்* நிரப்பு என்றார்.
மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த *கூழாங்கற்களில்* சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
"இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த *மணலை* அள்ளிப் பையில் போட்டார்.
பையை மேலும் குலுக்கினார்.
*கற்கள், கூழாங்கற்கள்* இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் *மணல்* இறங்கியது.
இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?
என்று *கணவர்* கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் *மனைவி.*
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
1). *அன்பு,கருணை,* *உடல்நலம்,மனநலம்,* போன்ற உன்னதமான விஷயங்கள்,
*பெரிய கற்கள் போன்றவை.*
2). *வேலை,வீடு,கார்,* போன்ற செல்வங்கள் *கூழாங்கற்களுக்குச் சமமானவை.*
3). *கேளிக்கை,வீண் அரட்டை* போன்ற அற்ப விஷயங்கள் இந்த *மணல் போன்றவை.*
*முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்*
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
ஆனால்,
உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,
👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*
*நல்லதையே செய்வோம் நல்லோராய் வாழ்வோம்*
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment