Thursday, October 19, 2017

இலங்கை வேந்தன் உயர் திரு. இராவண மகாராஜா - பகுதி 1

இலங்கை வேந்தன் உயர் திரு. இராவண மகாராஜா... மற்றும் அவரது படைத்தளபதியாகிய "நரகாசுரன்"... பற்றிய உண்மை வரலாறும்... தீபாவளிப் பண்டிகையின் தோற்றமும்.
➖ஈழத்து நிலவன் ➖
⭕〰〰〰〰〰〰〰⭕
["நம்ப முடியாத வீர சாகசங்களும், ஆபாசமான குறுங் கதைகளும் கொண்ட புராணக் கதைகள்.. எல்லாம் ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒரு சிலரால் எழுதப் பட்டவையே... இருந்தாலும் இந்தப் புராணக் கதைகளில் வரும் சில முக்கியமான கதா பாத்திரங்கள்.. உண்மையாகவே ஒரு காலத்தில் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்றும்... செவி வழியாக, சந்ததி சந்ததியாகக் கேட்டறியப்பட்ட கதைகள்... காலப் போக்கில் திரிபு படுத்தப்பட்டு.. பிற்காலத்தில் அவை புராணக் கதைகளாக உருவெடுத்தன என்றும்.. ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி பிற்பட்ட காலத்தில் திரிபு படுத்தப்பட்ட இரண்டு பிரபலமான புராணக் கதாபாத்திரங்களான "இராவணன்", மற்றும் அவனது படைத் தளபதியான "நரகாசுரன்" பற்றி நான் படித்த சில நூல்களில் இருந்து எடுத்துக் கொண்ட குறிப்புகளின் சுருக்கம் தான் இது....
இந்தோனேஸியா, மியான்மார், சைனா, ஜப்பான்.. என்று மொத்தம் ஏழு நாடுகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன.. ஒவ்வொரு நாட்டிலும் ராமாயணம் ஒவ்வொரு மாதிரி உள்ளது. சீனர்கள் சீதையை இராவணனின் மகள் என்கிறார்கள். பல கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கும் இராவணன் கடவுளாக வணங்கப் படுகிறார்.
இராவணனை அரக்கனாக சித்தரித்து இராமனை மட்டும் வழிபடும் வழக்கம் இந்தியர்களிடம் மட்டுமே உள்ளது.. இப்படி பல நாடுகளிலும் கடவுளாக வழிபடப்படும் இலங்கை வேந்தன் இராவணன் ஒரு தமிழன் என்பதை இன உணர்வுள்ள தமிழச்சியாக இங்கே பதிவு செய்கிறேன்.. எங்களுடைய இராவண மகாராஜா பத்து தலை கொண்ட அரக்கனோ.. அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்ட காமாந்தகனோ கிடையாது.. அவரைப் பற்றிய பெரும்பாலான உண்மைகள் பிற்காலத்தில் வால்மீகியாலும், கம்பனாலும் திரிபுபடுத்தப் பட்டவையே.... "சமணமும் தமிழும்" என்கிற நூலில் இருந்து நான் இந்த விபரங்களைப் படித்து அறிந்து கொண்டேன்.. யார் இராவணன்.... எது உண்மையான ராமாயணம் என்பதை மிகச் சுருக்கமாக கீழே எழுதி இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.. அந்த நூலில் இருக்கும் குறிப்புகள் முழுவதையும் எழுதுவதற்கு பல பக்கங்கள் வேண்டும்.. எனவே மிகச் சுருக்கமாக இராவணன்பற்றிய குறிப்புகளை மட்டும் இங்கே எழுதுகிறேன்."]
🔺©©©©©©©🔺
பெரும்பாலான புராணக் கதைகள்.. கி.மு 9540 காலப்பகுதியில் இன்றைய ஆப்கானிஸ்தான் ஊடாக இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறிய ஆரியர்களுக்கும்... இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களுக்கும் இடையிலான யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டவையே.. சுர பானம் அருந்துகிற ஆரியர்கள் "சுரர்கள்" என்று அழைக்கப் பட்டார்கள். சுரபானம் அருந்தாத தமிழர்கள் "அசுரர்கள்" என்று அழைக்கப் பட்டார்கள்.
இராமாயணம் போன்ற புராணக் கதைகளில் வரும் இராவணன், கும்பகர்ணன் போன்ற அசுரர்கள் உண்மையிலேயே இந்த தமிழ் மண்ணை ஆண்ட ஆதித் தமிழ் மன்னர்களே ஆவர். அசுரர்கள் கறுப்பு நிறமானவர்கள் என்றும் ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பெரும்பாலான ஆதித் தமிழர்கள் இப்படித்தான் தோற்றமளித்ததாகவும்.. பிற்காலத்தில் ஏற்பட்ட இனக் கலப்புகளாலேயே தமிழர்களின் தோற்றமும் நிறமும் மாறியது என்றும்... இன்றைய நவீன விஞ்ஞாணமும் ஒப்புக் கொள்கிறது.
இப்படி ஒருகாலத்தில் அசுரர் எனப்படும் ஆதித் தமிழ் மன்னர்களாக இருந்து... பிற்காலத்தில் வில்லன்களாக மாற்றப்பட்டவர்களே... உயர்திரு இலங்கை வேந்தன் இராவண மகாராஜா, மற்றும் அவரது படைத்தளபதி நரகாசுரன், இராவணனின் தம்பி பீடணன், கும்பகர்ணன், அவருடைய மகன் சேயோன்.. போன்றோர்களாவர். பெரும்பாலான ஈழத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இராவணன் மரபு வழி வந்தவர்களே.... இதற்கான பல வரலாற்றுச் சான்றுகள் இலங்கை முழுவதும் நிறைந்து கிடக்கிறது. தென்னிலங்கையில் "ரோஹண" என்று வரும் பெரும்பாலான ஊர்கள் "ராவண" என்ற பேரில் இருந்து மருவி வந்தவையே.. இலங்கையை ஆண்ட முதல் ஆதி மன்னன் ராவணன்தான் என்று சிங்கள ஆய்வார்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

No comments: