Thursday, October 19, 2017

இலங்கை வேந்தன் உயர் திரு. இராவண மகாராஜா - பகுதி 4

இந்த போரில் முதலில் சிறுவனாகிய.. இராவணன் மகன் சேயோன் கொல்லப்பட்டான்.. பிறகு கும்பகர்ணனும்.. அதன் பின்னர் மண்டோதரியும்..கொல்லப்பட்டார்கள்.. இறுதியாக சொந்தத் தம்பி பீடணனின் துரோகத்தால் இராவணனும் கொல்லப்பட்டான்.
இராமனின் படைகள் இலங்கை மா நகரத்தை தீ வைத்துக் கொளுத்தின.. பிறகு அசோகவனம் சென்ற இராமன் தனது மனைவி சீதையின் கற்பை சோதித்துப் பார்த்து.. அதில் அவன் திருப்தி அடைந்ததன் பிற்பாடு... அவளை அசோக வனத்தில் இருந்து மீட்டு.... பின்னர் தனக்கு உதவி செய்த இராவணனின் தம்பி பீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டி விட்டு திரும்பவும் குமரி நாடு திரும்பினான்.
இந்த நேரத்தல் இராவணன் இறந்த செய்தியை அறிந்த... இடை வள நாட்டின் விந்தியக் காடுகளில் பதுங்கி இருந்த இராவணனின் படைத் தளபதியாகிய "நரகாசுரன்".. தனது படையோடு குமரியில் இராமனை எதிரி கொண்டான்.
இராவணனின் படைத் தளபதியாகிய நரகாசுரனுக்கும் இராமனுக்கும் இடையில் குமரியில் மீண்டும் ஒரு போர் நடந்தது. இந்தப் போரில் இராவண மகாராஜாவின் கடைசி படைத் தளபதியாகிய நரகாசுரனும்.. கொல்லப்படவே... இலங்கை உட்பட முழு பாரத நாட்டிற்கும் ராமன் ஏகபோக அரசனாக முடி சூட்டப்பட்டான்.
இராவணனின் கடைசிப் படைத் தளபதியாகிய "நரகாசுரன்" கொல்லப்பட்டு... இந்திய துணைக் கண்டத்தின் ஏக போக அரசனாக தான் முடி சூடப்பட்ட நாளை... எல்லா மக்களும் கொண்டாட வேண்டும் என ராமன் அறிவிக்க... அந்த நாளே பிற்காலத்தில் தீபாவளியாக மாறியது.
தீபாவளியை தீபம் ஏற்றிக் கொண்டாடும் வழக்கம்... பிற்காலத்தில் சமண மதத்தில் இருந்து இந்து மதத்திற்குள் உள் வாங்கப்பட்டதாகும்.
தீபம் ஏற்றித் தீபாவளியை முதல் முதலில் கொண்டாடியவர்கள் சமணர்களே ஆவர்.. பிற்காலத்தில் பல சமணத் துறவிகள் கழுவில் ஏற்றப்பட்டு.. கட்டாயமாக பல சமணர்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட... அவர்கள் மூலம் தீபாவளி அன்று தீபம் ஏற்றும் பழக்கம் இந்துக்களிடம் வந்திருக்கிறது. தீபம்-ஆவளி என்ற சொல்லில் இருந்து மருவியதுதான் தீபாவளி..
எங்கள் இலங்கை வேந்தன் இராவண மகாராஜாவின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து.. பிற்காலத்தில் சாகசங்கள் நிறைந்த புராணக் கதையாக புனையப்பட்டதே ராமாயணம் ஆகும். அதை எழுதிய ஆரியக் கவிஞனான வால்மீகி இராமனை கதாநாயகனாகவும் ராவண மகாராஜாவை அரக்கனாகவும் புனைந்து.. மக்களைக் கவருவதற்காக பல அமானுஸ்ய விடயங்களைச் சேர்த்து.. வரலாற்றை மாற்றி எழுதி ராமாயணத்தை உருவாக்கினான்..
அனுமன் போன்ற பாத்திரங்கள் பிற்காலத்தில் வால்மீகியால் உருவாக்கப்பட்டவைதான்.... ராமன் வனவாசம் போனதும் அவனது கற்பனைதான்.
பிற்காலத்தில் வந்த கம்பன் அதில் பல பாலியல் கிளுகிளுப்புகளைச் சேர்த்து ராமாயணத்தை ஒரு ஜனரஞ்சக நூலாக மாற்றினான்.
லக்குவனனால் கொடூரமாக வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இராவணனின் தங்கை கம்பனால் கம்பராமாயணத்தில் ஓர் அரக்கியாகச் சித்தரிக்கப்பட்டாள்.
இராவணனுடைய விமானம், மாய மான் போன்ற அமானுஸ்யமான விடயங்களும் கம்பனின் கற்பனையே.. தவிர இராவணனை ஒரு சிவ பக்தனாக சொல்வதும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கற்பனையே... இராவணன் காலத்தில் சைவ மதமோ, இந்து மதமோ தோண்றியிருக்கவில்லை.. சிவ வழிபாடு என்பது இராவணன் காலத்துக்குப் பிறகே இந்தியாவில் உருவானது.
எது எப்படியோ.. "தமிழ் மன்னனாகிய இராவணனின் இறுதிப் படைத் தளபதியாகிய "நரகாசுரன்".. எனப்படுகின்ற எங்கள் பாட்டனின் இறந்த நாளையே நாங்கள் ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்கிற பெயரில்... பட்டாசு வெடித்து புத்தாடை பூண்டு கொண்டாடுகிறோம்"... என்பது மட்டும் உண்மை.. வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் தீபாவளி கொண்டாடப் படுவதைப் போல... இலங்கையில் தமிழர்களாலும், சிங்களவர்களாலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் படுவதில்லை... ராமரை வழிபடும் வழக்கமும் இலங்கையில் கிடையாது.
➖ஈழத்து நிலவன் ➖


No comments: