சிறு கதை - விவரமான முதலாளி
ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.
கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.
கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:
பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"
அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?
எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.
அதோடு " தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.
உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.
மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான், " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி."
ஒரு தத்துவம்
ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே?''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''
"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம் சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்:
"இங்க பாருப்பா... உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்?''
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால்?''
"காயம் ஏற்படும்''
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்'' என்றார் மகான்.
No comments:
Post a Comment