1. கடுக்காய், தான்றிக்காய், மஞ்சள் சம அளவில் எடுத்து தூள் செய்து தினசரி இரவில் உணவுக்குப்பின் சாப்பிட இரத்த மூலம் தீரும்.
2. நாயுருவி இலை, மணத்தக்காளி கீரை, மஞ்சள் மூன்றையும் சேர்த்தரைத்துச் சாப்பிட இரத்தமூலம், இரத்த பேதி குணமாகும்.
3. ஐந்து கிராம் கடுக்காய் தூளுடன் (ஒரு ஸ்பூன்) இரண்டு கிராம் மஞ்சள் தூள் சேர்த்து, 100 மி. விளக்கெண்ணெய்யில் கொதிக்க வைத்து இறக்கவும். இதில் ஒரு ஸ்பூன் இரவில் சாப்பிட்டு வரவும். ரத்த மூலம் குணமாகும்.
4. அத்தி - 50 கிராம்
துத்தி - 50 கிராம்
ஆவாரம்பூ - 50 கிராம்
பிரண்டை - 50 கிராம்
பொடுதலை - 50 கிராம்
மருதம்பட்டை - 50 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
துத்தி - 50 கிராம்
ஆவாரம்பூ - 50 கிராம்
பிரண்டை - 50 கிராம்
பொடுதலை - 50 கிராம்
மருதம்பட்டை - 50 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
இவைகளை தூள்செய்து கொண்டு காலை, இரவு உணவுக்குப் பின் தொடர்ந்து சாப்பிட்டுவர ரத்த மூலம் உடனே குணமாகும்.
5) மாங்கொட்டைப் பருப்புடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துச் சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
6) நாவல் கொட்டை பருப்புடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து சாப்பிட ரத்த மூலம் தணியும்.
7) மாந்துளிர் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துச் சாப்பிட ரத்த மூலம் தணியும்.
8) வில்வப்பழத்தை இளநீர் சேர்த்து கூழாக்கி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்தருந்த ரத்த மூலம் நீங்கும்.
9) மஞ்சள் தூளிட்டு செய்த கசாயத்தில், சிறிது கடுக்காய் தூள் கலந்து அதில் ஆசன வாயைக் கழுவ ரத்த மூலம் நிற்கும்.
~ தயவு செய்து மாமிசம் சாப்பிட வேண்டாம்.
No comments:
Post a Comment