Wednesday, November 1, 2017

முடிஞ்சா சிரிக்காதீங்க

JOKE 1
------
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா  இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.
ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்.
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!!
மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார். இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி. அந்த நாய் கிட்டே போனைக் கொடு..! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு..!
🤣🤣🤣

JOKE 2
------
கணவன் சோகமாக வீடு திரும்பினான்...
மனைவி: *"ஏன், என்ன ஆச்சு?"*
கணவன்: *"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"*
மனைவி: *"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியத்ல"*
தொலைக்காட்சி: *"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"*
மனைவி: *"இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"*
JOKE 3
------
டொனால்டு ட்ரம்ப்பு வெள்ளை மாளிகைக்குப் பெயிண்ட் அடிக்க நினைத்தார். பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்தம் விடுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்.
சீனாக்காரன் 3 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.
ஐரோப்பாக்காரன் 7 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.
இந்தியாக்காரன் 10 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.
ட்ரம்ப்பு சீனாக்காரனை அழைத்து, "நீ எப்படி 3 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "1 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 1 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 1 மில்லியன் லாபத் தொகை" என்றான்.
ட்ரம்ப்பு ஐரோப்பாக்காரனை அழைத்து, "நீ எப்படி 7 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "3 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 2 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 2 மில்லியன் லாபத் தொகை" என்றான்.
ட்ரம்ப்பு இந்தியாக்காரனை அழைத்து, "நீ எப்படி 10 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "4 மில்லியன் உங்களுக்கு, 3 மில்லியன் எனக்கு, நாம் இருவரும் இணைந்து 3 மில்லியனை சீனாக்காரனிடம் கொடுத்து அந்த வேலையைச் செய்யச் சொல்லுவோம்" என்றான்.
ட்ரம்ப்பு ஒரேயடியாய்ங அசந்து போனார். வேறு பேச்சுப் பேசாமால் இந்தியாக்காரனுக்கே ஒப்பந்தத்தை வழங்கினார்.

No comments: