👉 *எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர்
ஒருவருக்கு, எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை......*
1. *புத்தகங்களைத் துணை கொள்.*
2. *உடலுழைப்பை அதிகரி.*
3. *சமூகம் புறக்கணித்தவற்றைக் கைவிடு.*
4. *குளிர்ந்த நீரில் குளி.*
5. *கொஞ்சமாய்ச் சாப்பிடு.*
6. *தியானம் கைக்கொள்.*
7. *இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.*
8. *உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.*
9. *உணவில் கீரை சேர்த்துக் கொள்.*
10. *எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.*
11. *ஆத்திரம் அகற்று.*
12. *கேலிக்குப் புன்னகை தா.*
13. *கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.*
14. *நட்புக்கு நட்பு செய்.*
15. *வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.*
16. *அலட்சியப் படுத்தினால் விலகி நில்.*
17. *அன்பு செய்தால் நன்றி சொல்.*
18. *இதமாகப் பேசு.*
*நீ ஜெயிப்பாய்.... இது நிச்சயம் ! ! !* *வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய்.* *இது சத்தியம்.
No comments:
Post a Comment