ஜோக் 1
சாப்பிட வந்தவரிடம் சர்வர் ஏதோ சொல்ல அவர் மிரண்டு ஓடுவதை பார்த்த முதலாளி..,
சர்வரை கூப்பிட்டு,
"என்னய்யா... சொன்னே.? , வந்தவரு அப்படி ஓடுறாரே..?"ன்னு கேட்டார்..
சர்வர் சொன்னார், "நான் எதுவும் சொல்லலீங்கய்யா... வாங்க சார்.. உங்க வீட்டு சாப்பாடு
மாதிரியே இருக்கும்"ன்னு தான் சொன்னேன்..!
ஜோக் 2
அம்மா ராஜா கதை சொன்னாள்.
பிள்ளை சொன்னான் : அம்மா. நான் பெரியவனானால், எனக்கும் மூணு பெண்டாட்டி வேணும்.
அம்மா : எதுக்குடா மூணு?
பிள்ளை : ஒருத்தி சமைப்பா. ஒருத்தி பாட்டு பாடுவா. ஒருத்தி எனக்கு துணி துவைப்பா.
அம்மா : நாலாவது ஒரு பெண்டாட்டி வச்சுக்கோயேன் ராத்திரி தூங்குறதுக்கு…?
பிள்ளை : வேண்டாம்மா.. நான் உன் கூடதான் தூங்குவேன்.
(அம்மாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது.)
அம்மா : அப்போ அந்த மூணு பெண்டாட்டிகளும் யார்கூட தூங்குவாங்க?
பிள்ளை : அப்பாகூட தூங்கட்டும்.
(அப்பாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது) 😁😀😃😄😆
ஜோக் 3
அப்பா : டேய்!! நான் சொல்ற பேச்சை கேளுடா..
மகன் : நோ!!! நான் கேக்க முடியாது ... நான் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்...
அப்பா : உனக்கு 4 மாடு வாங்கி கொடுத்தது தப்பா போச்சு
உன்னையெல்லாம் B.E, B.Tech, MCA, MBA ன்னு படிக்க வச்சி தெருத்தெருவா அலைய விட்டு
இருக்கணும் !!!
CLICK HERE TO READ MORE GOOD JOKES FROM WHATSAPPRECORDS.BLOGSPOT.IN
...
No comments:
Post a Comment