Sunday, November 19, 2017

கோபத்திலும் நிதானம் தேவை...

கடுமையான அதிகார தோரணையுடைய ஒருவர் ஒரு கம்பனியின் நிர்வாக பொறுப்பை ஏற்றுகொண்டார்.
*" சும்மா சோம்பி இருப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. வெளியே துரத்த படுவார்கள் " என்று முதல் நாளே மிரட்டினார்.*
ஒரு நாள் மற்ற பணியாளர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஒருவன் மட்டும் சுவரில் சாய்ந்து நின்று இருப்பதை கவனித்தார்.
*" ஏய், வா இங்கே ..! என்று கோபமாக அழைத்தார்.*
அவன் பதறி வந்தான்.
" உன் சம்பளம் எவ்வளவு..? "
ஐயாயிரம் ரூபாய் , ஐயா..!
என்னுடன் வா...!
கோபத்துடன், சம்பள கணக்கு பிரிவுக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் வாங்கி, அவனிடம் கொடுத்து, *"இந்தா இரண்டு மாத சம்பளம். இனி உனக்கு இங்கே வேலை இல்லை"* என்றார்.
_அவன் பதில் சொல்ல விரும்பியபோது, *"வெளியே போ"* என்று விரட்டிவிட்டார்._
தான் கடுமையானவன் என்பதை நிருபித்த பெருமையில், ஒரு பணியாளரை கூப்பிட்டு... *"என்ன புரிந்து கொண்டாய்...?"* என்றார்.
*_"பீட்சா டெலிவரி செய்ய வந்தவனுக்கு, நீங்கள் மனது வைத்தால் கொழுத்த டிப்ஸ் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன் என்றான்"_*
*கோபத்தில்* இயங்கும்போது இப்படிதான் தாறு மாறாக முடிவுகள் எடுக்க நேரும்.
*உங்களை நீங்கள் பெரிதாக எண்ணாமல், நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரத்துடன் இல்லாமல் இருந்தால், எந்த பிரச்சனையும் நம்மை கட்டிப் போட முடியாது*
*பிரச்சனைகளின் விளைநிலம்  நமது குடும்பமோ , நிறுவனமோ அல்ல. நமது மனம் தான்.*
சிலர் நினைக்கிறார்கள் கோபத்தோடு, கடு கடு வென்று இருந்தால் சிறப்பாக நிறுவனம் செய்யலாம் என்று... ஆனால் கோபத்துடன் நிதானமும் கலந்திருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.
நீங்கள் கோபத்தோடு இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உணர வேண்டும். நீங்கள் கண்டிப்பானவர் எனபதை அவர்கள் உணரவேண்டும் ஆனால் நீங்கள் கோபத்தில் செயல்பட்டு விட்டீர்கள் என்று யாரும் சொல்லிவிடாதபடி உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்...
நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்...

No comments: