Sunday, November 19, 2017

கிறிஸ்தவன் என்பவன் யார்?

*கிறிஸ்தவர்களின் வீடு என்றால் சுவர்களில் வேதவசனம் எழுதப்பட்ட பலகைகள் தொங்கும்*
*இல்லத்தின் சுவரில் எழுதப்பட்ட வசனம் உள்ளத்திலே, கிரியைகளிலே உண்டா?*
*கிறிஸ்தவரின் வாகனம் என்றால் தங்களுக்கு பிடித்த ஆசீர்வாதமான வசனத்தை எழுதிகொள்வார்கள்*
*வாகனத்திலே எழுதப்பட்டுள்ளது போலவே கிறிஸ்துவின் பிரசன்னம் முன் சென்றிட பரிசுத்தமான வாழ்வும், வாகன ஒட்டிகளின் விதிமுறைகள் கடைபிடிப்பது உண்டா?*
*ஒருவர் கிறிஸ்தவரென்பதை சிலர் கழுத்தில் சிலுவை அணிந்தும், சிலர் எந்த நகை ஆபரணங்களும் அணியாது கிறிஸ்தவர்கள் என்பதை வெளிப்படுத்துவார்*
*சுயம் சிலுவையிலே அறையப்பட்டுள்ளதா? உலகத்தி ஆசை இச்சைகளை வெறுத்துதான் நகை ஆபரணம் கழற்றியுள்ளீர்களா அல்லது உங்கள் ஊழியரின் அனுபவ போதனையா?*
*கிறிஸ்தவம் என்பது வெறும் தோற்றத்தில் காண்பிப்பது அல்ல கிரியைகளிலே கிறிஸ்துவின் உபதேசத்தை கைக்கொண்டு வாழ்தல்.*
*22 உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்*. 1 பேதுரு 1:22

No comments: