Monday, December 4, 2017

கொய்யா பழத்தின் நன்மைகள் குறித்து இங்கே காணலாம்

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், நம் நாட்டின் கொய்யாவில் தான் அதிக சத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முழுமையாக அறிந்து கொண்டால், ஆப்பிளை தவிர்த்து கொய்யா பழத்தையே உண்ணத் தொடங்கிவிடுவோம். இதுகுறித்து சற்று விரிவாக காணலாம்.
கொய்யாவில் நிரம்பியுள்ள சத்துக்கள்
> வைட்டமின் சி - கொய்யாவில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் உள்ளது.
> வைட்டமின் 'சி' சத்து உடலை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.
> நார்ச் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது.
எச்சரிக்கை
> கொய்யாவை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
> அதிக அமிலத்தன்மை இருப்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது பல தொந்தரவுகள் ஏற்படும்.
பலன்கள்
> போலிக் ஆசிட், வைட்டமின் பி9 உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் உண்ணலாம்.
> கொய்யா உடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து உண்டால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும்.
> கொய்யா, சப்போட்டா, தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்; ரத்தம் சுத்தமாகும்.
> கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடும் தலைவலி, ஒற்றை தலைவலி நீங்கும்.
> கொய்யா இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால், வயிற்று வலி, தொண்டை புண் குணமாகும்.
> மதிய உணவுக்கு பின் கொய்யா சாப்பிட்டால், நன்கு ஜீரணம் ஆகும்.
> மலச் சிக்கல், வயிற்றுப் புண், ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
> மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும்.
> நார்ச் சத்தும், குறைந்த சர்க்கரை அளவு இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

No comments: