Monday, December 4, 2017

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படும் இறைஞானம்

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் சரணாலயம் ஒன்று உள்ளது.
இந்நகரில், பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதியியில் கூட சிங்கம், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும்.
சில நேரங்களில் நகருக்குள் வரும் சிங்கங்கள் அங்குள்ள பண்ணைகளில் புகுந்து ஆடு, மாடுகளை சாப்பிட்டுவிடக் கூடிய நிலை இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் நைநோபியைச் சார்ந்த பதிமூன்று வயதே நிரம்பிய ரிச்சர்டு டுரேரே, சிங்கங்களிடமிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற தந்திரமான வழியைக் கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். இது நாடு முழுவதும் மிக ஆச்சரியமாகப் பேசப்பட்டது.
இது குறித்து ரிச்சர்டு டுரேரே என்ற அந்தச் சிறுவன் கூறியதாவது, “இரவில் நாங்கள் தூங்கும் சமயத்தில் பண்ணைக்குள் நுழையும் சிங்கங்கள் மாடுகளைக் கொன்றுவிடும்.
ஒருமுறை கையில் டார்ச் லைட்டுடன் நான் பண்ணையின் அருகில் சென்றபோது, சிங்கங்கள் வெளிச்சத்தைக் கண்டு பயந்து ஓடுவதைக் கண்டேன். அசையும் விளக்கு வெளிச்சங்கள் சிங்கங்களை மிரட்டும் என்பதை கண்டுபிடித்தேன்.
அதன்பின் பண்ணையைச் சுற்றிலும் விளக்குகளைப் பொருத்தி, அவை அவ்வப்போது அணைந்து எறிவது போல, அவற்றுக்கு மின் இணைப்பு கொடுத்தேன். எனது யோசனை வெற்றிகரமாக வேலை செய்தது.
அதன்பின் சிங்கங்கள், எங்கள் பண்ணைக்கு அருகே வருவதில்லை. என்னுடைய இந்த யோசனையைப் பார்த்துவிட்டு, நகரில் இருந்த மற்றவர்களும் அதைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.
இப்போது நைரோபியில் விலங்குகள் தொந்தரவு இல்லை” இவ்வாறு ரிச்சர்டு டுரேரே கூறினான்.
சிறுவனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பல்கலைகழகமானது அவனை சிறப்பித்தது.
பெரியவர்கள் யாருக்குமே தோன்றாத ஒரு யோசனை சிறுவன் ஒருவனுக்குத் தோன்றியது மிகச் சிறப்பான ஒரு காரியம் ஆகும்.
இதுதான் சிறு குழந்தைகளுக்கும், எளிய மனத்தவருக்கும் கடவுளின் ஞானம் அதிகமாக வெளிப்படும் என்ற உண்மையின் வெளிப்பாடாகும்.

No comments: