Wednesday, January 3, 2018

காதல் கவிதை : இனிக்கிறது

❣❤ நினைத்துக்கூட பார்க்கவில்லை நீ கிடைப்பாய் என்று....
கிடைத்தவுடன் நினைத்துவிட்டேன் நானும் அதிர்ஷ்டசாலி என்று...
மற்றவர்கள் அனுப்பும்
குறுஞ்செய்திகள்
சாதாரண ரிங்டோனாக
ஒலிக்கும்
என் செல்போனில்,
நீ அனுப்பும்
காதல் செய்தி மட்டும்
*'டும் டும் டும்'*
என்று ஒலிக்கிறது!!
ஐ லவ் யூ' என்று ஆங்கிலத்தில்
சொல்வதைவிட
'நான் உன்ன காதலிக்கிறேன்' என்று தமிழில்
சொல்லும் போது
இன்னும்
இனிக்கிறது
*நம் காதல்!*
உன்னை தவிர
வேறு எதை பற்றியும்
எழுத மறுக்கிறது
என்
கவிதைகள்!

அம்மா ஊட்டிவிடும்
சாக்லேட் குக்கீஸ்
வெளியூரிலிருந்து
அப்பா அனுப்பும்
ரோல்லேக்ஸ் கடிகாரம்
என்ஜீனியர் அக்கா வாங்கி வந்த
லேப்டொப்
டாக்டர் அண்ணா வாங்கி தந்த
ஹோண்டா ஸ்கூட்டீ
இவற்றில் கிடைக்காத சந்தோஷம்
நீ வாங்கி தந்த *ஒற்றை ரூபாய்*
*ஸ்டிக்கர் பொட்டில்*
கிடைத்தது எனக்கு!!

நீ இவ்வளவு
அழகாய் பிறந்த
ரகசியத்தை
அத்தையிடம் கேட்டு
தெரிந்து கொள்ளவேண்டும்
*நம் குழந்தையும்*
அழகாய் பிறக்கவேண்டாமா?

என்னை ராணி போல்
பார்த்து கொள்ளும்
ராஜாவாக இல்லாமல்
என்னை குழந்தை போல்
பார்த்து கொள்ளும்
ஒரு அம்மாவாய்
*நீ வருவாயா?*
சமையலறையில் உனக்கு
உதவியாய் நானும்
சில வேலைகளை
செய்ய,
காய்கறி வெட்டும்போது
தெரியாமல் கத்தி
லேசாய் என் கட்டைவிரலை
கீற
நீ துடித்துபோய் உடனே
ரத்தம் கொட்டாமல்
உன் வாயால் உருஞ்சி எடுத்தாய்
அட இது தெரிந்திருந்தால்
என் உதட்டில் கீறி
கொண்டிருப்பேனே...

No comments: