Tuesday, January 9, 2018

வாழ்வியல் சிந்தனைகள்

எதை உங்கள் இயல்பாக ஆக்கியுள்ளீர்களோ அதுவே,உங்கள் வாழ்வில் ஏற்படும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கின்றது. இயல்பை உருவாக்கிய நீங்கள் தான் அதை மாற்றமும் செய்யமுடியும். எனவே, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் இயல்பையும், தன்னால் பிறர் துன்புறும் இயல்பையும் இந்த நிமிடம் முதல் மாற்றம் செய்து, இறைவனின் நினைவில் அன்புடன் ஆனந்தத்தை அனுபவம் செய்வதை தனது இயல்பாக மாற்றிவிடுங்கள்...
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் திரும்ப வராது, நம்மை கடந்த காலம் காலில் விழுந்தாலும் திரும்ப கிடைக்காது...
இனிமையான குரலும் அழகான முகமும் உறவுக்கு தேவையில்லை ஆனால்
இனிமையான இதயமும் ஆழமான நம்பிக்கையுமே தேவை...
உங்கள் மனம் எந்த விஷயங்களில் நிலை தடுமாறுகின்றதோ, அந்த விஷயங்களில்
உங்கள் மனம் எலிக்கூண்டில் தேங்காய் வைக்கப்பட்டிருப்பதை போலாகும்...
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும் கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்...
மாற்றங்கள் வரும் சமயத்தில் கவலை கொள்ளாதீர்கள். அது உங்களது வெற்றிக்கான மாற்றமாகவும் இருக்கலாம்...
தற்கால மருமகளின் புதிய ஒப்பந்தம் : "எங்கே ஷாப்பிங், டூர் போவதாக இருந்தாலும், என் குழந்தையை மாமியார் பார்த்துக்கணும். மாமியார் குழந்தையை நான் பார்த்துக்குவேன்...
பாடுபட்டு பணத்தை தேடி புதைத்து வைத்த கேடு கெட்ட மானிடர்காள் கேளுங்கள் கூடு விட்டு ஆவி போனால் கொள்வார் யார் அந்த பணம்.
சகமனிதனை கருணையோடு பார்க்க உன் #கண்களுக்கு  சொல்லிக்கொடு.
உண்மையையும் நல்லதையும  பேசமட்டுமே உன் #உதடுகளுக்கு சொல்லிக்கொடு.
உழைக்கவும், பிறருக்கு உதவவும் உன் #கைகளுக்கு  சொல்லிககொடு
நல்லதை நினைக்கவும், பிறரை அன்போடு நேசிக்கவும்
உன் #மனதிற்க்கு சொல்லிக்கொடு.
இறைவனே
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
நீ இல்லாமல் நானும் நானல்ல...
உண்மையான வெற்றி நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் முன்னால்
நிம்மதியாய் வாழ்ந்து காட்டுவதே.                             
வாழ்கையில் நல்லது நடந்தால் பெருமைக்கொள்...
நடக்கவில்லையா... அதைவிட அதிக அளவு பெருமைக்கொள்
ஏனென்றால் நாளை அதைவிட சிறப்பாக நடக்கும்...
"நம்பிக்கை" எனும் ஒளி நமக்கு முன்னால் இருந்தால்... "பயம்" எனும் நிழல்
நமக்கு பின்னால் போய்விடும்!
"வாழ்க்கை" என்பது, நாம் நினைப்பது போல் சாதாரணம் இல்லை.....
நாம் நினைப்பது போல் அசாதாரணம் இல்லை..
நாம் நினைப்பது போல் இயல்பானது.

No comments: