Saturday, February 17, 2018

சிந்திக்க சில வரிகள்

* சந்தித்த  அவமானங்கள் கை நழுவி போன வாய்ப்புகள் கடந்து வந்த பாதைகள் இவையெல்லாம்  நமக்கு கற்றுதந்தது அனுபவ பாடமே.
* நம்பிக்கையோடு நேர்மறை எண்ணங்களில் சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
* உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
* தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட, எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே எதனையும் மதிப்பிட வேண்டும்.
* நல்ல சிந்தனைகளை சொல்லில் வெளிப்படுத்துபவனைவிட, செயலில் நெறிப்படுத்துபவனே உயர்ந்து நிற்கிறான்.
* இறையுணர்வு என்பது இனிப்பு போன்றது. அதை மற்றவர்கள் கொடுக்கத்தான் முடியுமே தவிர உணர்த்த முடியாது.
* கற்பதும், கற்றதை பிறர்க்கு கற்பிப்பதும் வாழ்க்கை"
* உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றனர். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
* அறிவு, திறமை, முயற்சி அனைவரிடமும் இருக்கிறது. அதை எப்படி சரியாக பயன் படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே, வாழ்க்கையின் முன்னேற்றம் வேறுபடுகிறது.
* எதுக்கெடுத்தாலும் ஏதாவது காரணம் சொல்பவர்களிடம், என்ன செய்யலாம் என்று, அவர்கள் கருத்தை கேட்காமல் இருப்பதே நமது முன்னேற்றத்திற்கு நல்லது.
* நாம் சிலரை தூக்கி வைக்கிறதும், அவங்க நம்மல தூக்கி போட்டுட்டு போறதும், நடக்கும்போது தான் வாழ்க்கையின் அனுபவ பாடம் ஆரம்பமாகிறது.
* உங்கள் அனுபவத்தால் உங்களைப் பற்றி நீங்கள் உணரவில்லை எனில், அடுத்தவர்களின் கருத்தால் எந்த பயனும் கிடைக்காது.
* நம் எண்ணங்களே நம்மை ஆக்கவும் அழிக்கவும் கூடிய மிகப் பொிய ஆயுதம். எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்.

No comments: