Tuesday, March 20, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 12

அதற்கு கஸ்தூரிபாய் ''நீ உன் மக்களின் உரிமைக்காய் பேசும்பொழுது காங்கிரஸ் குறிக்கிடாது. அதே நேரம் என் புருஷனின் உயிரும் உன் கையில்தான் இருக்கிறது''. பாபாசாகேப் சொல்கிறார் ''அவருக்கு வேணா உயிரை விட மதம் பெரிதாக தெரியலாம். நானோ என் மக்களின் உயிருக்காய் இறங்கி வருகிறேன்''. அடுத்து நடந்த முக்கிய திருப்பம்  ''சரி என்ன வேண்டும் உன் மக்களுக்கு?''. பாபாசாகேப் எதை வலியுறுத்துகிறார்? ''என் மக்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும்''. ''ஓ.கே. கிராண்டட்''. இரண்டாவது, ''அந்த ஓட்டால் தேர்ந்தெடுத்த பிரதிநிதி என் மக்களுக்கு விசுவாசமா இருக்கணும்''. ''எப்படி?'' ''எங்கள் ஓட்டால் வந்த பிரதிநிதி, உங்க கைக்கு கீழே இருக்கக்கூடாது. அதாவது உங்க ஓட்டால் அவன் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. அதுக்கு காந்தி, ''ஏன், உங்க பிரதிநிதி உங்களுக்கு மட்டும்தான் தலைவனாயிருக்கணுமா? எங்களுக்கு தலைவனா இருக்க கூடாதா?'' என்றார். ''நீங்க வேணா மகாத்மாவாயிருக்கலாம். எல்லோரும் மகாத்மா இல்லையே''. ''சரி அம்பேத்கர், பிரிட்டிஷார் 78 தனித்தொகுதி கொடுத்திருக்காங்க. நாங்க 151 தனித்தொகுதி தாரோம். ஒரே கண்டிசன், ஓட்டு எல்லோரும் போடுவோம். அதில் யார் ஜெயிக்கிறார்களோ? அவர்தான் அந்த தொகுதியின் பிரதிநிதி''. அதுக்கு பாபாசாகேப்பின் பதில் ''உதாரணமாக ஒரு தொகுதியில் எங்க மக்கள் 25% சதவீதம், மற்றவர்கள் 75% இருக்கையில் இந்த 75% மக்களுக்கு ஆதரவாய் இருக்கும் எஸ்.சி. பிரதிநிதிதான் தேர்வு செய்யப்படுவானேயொழிய, அவன் என் மக்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டான்'' என்றார். அதற்கு காந்தி, ''தனித்தொகுதிகளில் எங்க காங்கிரஸ் சார்பாக யாரையும் நிறுத்த மாட்டோம்'' என வாக்கு கொடுக்கிறார்.
''மூணாவதா, M.L.A., M.P. சீட் கொடுப்பது மட்டுமல்ல.  திட்டம் செயல்பட அரசு அதிகாரிகளிலும் இட ஒதுக்கீடு வேணும். ஏன்னா எங்க பிரதிநிதிகளின் திட்டத்தை செயல்படுத்த தாசில்தாரும், கலைக்டரும் உயர்சாதியா இருந்தா இவன் ஆர்டர் போட்டாலும் அவன் பண்ண மாட்டான்''  என்றதும், ''சரி அதிகாரிகளிலும் உங்களுக்கு ரிசர்வேசன் உண்டு''. இதையடுத்து நடந்த தேர்தலில் பாபாசாகேப் தனது ''இன்டிபென்டன்ட் லேபர் பார்ட்டி'' என்ற கட்சியின் சார்பாக, தனித்தொகுதி 151லேயும் போட்டியிடுறாங்க. ''தனித்தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாது'' என்ற காந்தி தனது வாக்கை மீறி 151லேயும் காங்கிரஸ் சார்பில் எஸ்.சி-க்களை நிறுத்தினார். இதனால பாபாசாகேப் அணி வெறும் 15 சீட்டே ஜெயிக்க முடியுது. காந்தியின் காங்கிரஸ் 78 சீட் ஜெயித்தது. இப்ப தனித்தொகுதியான 151 தொகுதியில் 151 எஸ்.சி., எஸ்.டி. என்றாலும் 78 சீட் காங்கிரஸ். எல்லாரும் பார்லிமெண்ட் போனாங்க. அங்கே அம்பேத்கர் அணி ''எல்லா விவசாயிகளுக்கும் நிலம் வேணும்''ன்னாங்க. அந்த 78 பேரும் ''வேண்டாம்''ன்னாங்க. ''எல்லா கிராமங்களிலும் பள்ளிகள் வேணும்''னாங்க. அவங்க ''வேண்டாம்''ன்னாங்க. யாரோட பேச்சு பாஸாகும். நிச்சயமா மெஜாரிட்டியான 78 பேரின் பேச்சுதான். இப்போ நம்மளோட நலதிட்டத்தை காந்தி எதிர்க்கலை. ஆனா காந்தியின் கொள்கையை நம்ம வாயால பேச வைச்சிட்டார். இப்பகூட ''இட ஒதுக்கீடு தேவையில்லை'' என நம்ம வாயாலே சொல்ல வைச்ச அமித் ஷா மாதிரி. நம்ம ஆளுங்களே ''பள்ளி வேண்டாம், நிலம் வேண்டாம்''ன்னு ஏன் சொன்னாங்கன்னா இவனுக்கு சமுதாயம் முக்கியமில்லை. தன் நலனே பிரதானம். சுயநலம் கொண்டவர்களின் சமுதாயம் என்னிக்குமே அடுத்தவனுக்கு கைகூலியாத்தான் இருக்கும்.
சுயநலம் பிடிச்சவனுக்கு 100 வாய்ப்புகள் வந்தாலும் அதை தன் சமூகத்தை பலியாக்கி, சொந்த நலனுக்காகவே பயன்படுத்துவான். அவனால் சமுதாயத்திற்கு எந்த பிரயோஜனுமில்லை. அதனால்தான் ''சமுகத்திற்குள்ளேயே ஒரு புரட்சி செய்யணும்'' என்று புத்தர் சொல்கிறார். பாபாசாகேப் போராடி பெற்ற உரிமைகள் கிடைச்சாலும் நமது அறிவின்மையால், சமுதாய உணர்வில்லா, பொதுநலம் இல்லாமல் இருக்கிற தலைவர்களால் நமக்கு கிடைச்ச உரிமைகளே இன்று நமக்கு எதிராய்தான் ஆகிவிட்டது. தேர்தல் வெற்றிக்குபின் பாசாகேப்பை நிருபர்கள் கேட்டார் ''முதல்முறையா பாராளுமன்றம் போகபோறீங்க. எப்படி உணர்றீங்க?'' இப்போ பாபாசாகேப் சொல்கிறார். ''வெள்ளைக்காரன் ஒரு வந்தேரி. ஆனால் அவன் கூட என் மக்களின் குறைகள் சொன்னவுடனே, என் மக்களின் பசி போக்க ஒரு அருமையான பழத்தை கொடுத்தான். இதை வைத்து உங்க மக்களின் பசியாற்றுங்கள் என்று. ஆனால் காந்தி அந்த பழத்தை என்னிடம் கொடு. நான் மகாத்மா. அந்த பழத்தை உன் மக்களுக்கு சமமாய் பங்கிடுவேன் என்று சொல்லி அந்த பழத்தை அறுத்து, ஜூஸ் எடுத்து தனக்கு வைத்துக்கொண்டு, அதன் தோலையும் தின்று, சக்கையை மட்டும் என் முகத்தில் துப்பி விட்டார். எல்லாரும் இவரை மகாத்மான்னு சொல்றாங்க. இவன் மனுஷனாக கூட தகுதியில்லாதவன். இவன் எப்படி மகாத்மாவாவான். ஹி இஸ் ய ராஸ்கல். என் மக்களை கருணையாலே கொன்னுட்டான். இவன் நேர்மையான எதிரி இல்லை. நேர்மையற்ற நண்பன் (துரோகி)'' என மனம் வெதும்பி பதில் சொன்னார். இப்பக்கூட பா.ஜ.க. நமக்கு நேர்மையான எதிரி. ஆனால் காங்கிரஸோ நேர்மையற்ற நண்பன்தான். தமிழ்நாட்டில் தி.முக., அ.தி.மு.க. இரண்டுமே நேர்மையற்ற நண்பர்கள்தான். அதாவது துரோகிகள். தமிழ்நாட்டில் தலித் தலித்ன்னு கூவுற பெரும்பாலான கட்சிகளுக்கு கூட அம்பேத்கரியம் இல்லை.
- தொடரும்

No comments: