Thursday, October 29, 2020

வீரமும்...! விவேகமும்...!!

ஒரு மனிதன் முழு மனிதனாக வேண்டும் என்றால், அதற்கு அவனிடம் வீரம், துணிவு மட்டும் இருந்தால் போதாது. விவேகமும், மனத் தெளிவுடன் கூடிய அறிவு இருக்க வேண்டும்...

ஆரவாரமாக செய்யும் எந்த செயலும் தோல்வியில் தான் முடியும்...

ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய, அமைதியான மனநிலையும், முன் யோசனையுடன் கூடிய அறிவு வேண்டும். உங்களை ஒருவர் குறைத்து பேசும்போது அடக்கமாக இருங்கள். அது உங்கள் வீரம், உங்களை ஒருவர் புகழ்ந்து பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்கள் விவேகம்...

வீரமும் வேண்டும்...! அதோடு விவேகமும் வேண்டும்...!!
.
 “ராஜாராணி”படத்தில் சாக்ரடீஸ் வேடம் தரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய வசனத்தை பேசி நடித்திருப்பார்...

அந்த வசனத்தில்..

“ஏதென்ஸ் நகரத்தின் எழில்மிக்க
வாலிபர்களே ஓடிவாருங்கள்...! ஓடி வாருங்கள்...!

நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம்
கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்...

வீரம் விலை போகாது,
விவேகம் துணைக்கு வராவிட்டால்...!

தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே
தூக்கிய ஈட்டி மட்டும் போதாது வீரர்களே...!

இதோ நான் தரும் "அறிவாயுதத்தையும்
ஏந்திக் கொள்ளுங்கள்...!” என்று பேசுவார்...

*ஆம் நண்பர்களே...!*

 *வெற்றியாளனின் வெற்றிக்கு வீரமும், விவேகமும் அவசியம்...!*

 *எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும்...!!*

 *இருளை தடுமாறச் செய்கிறது விவேகம். அறிவு என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. மிகைப்படுத்த ப்பட்ட நம்பிக்கையைத் தருகிறது, விடியலைக் காண்கிறது...!!!*

No comments: