Tuesday, June 12, 2018

தற்சார்பை முன்னெடுப்போம்...

எந்த ஒரு பெரிய வினையும் ஆதியில் சிறு விதையாகவே நடப்பட்டிருக்கும். இன்றைய மக்களின் அடிமைத்தனத்திற்கும் அவலங்களுக்குமான விதை ஏதோ இன்று நேற்று விதைத்ததல்ல. பல நூறு வருடங்களாக சிறுக சிறுக உங்கள் மனதில் விதைக்கப்பட்டவை.
ஆக இன்றைய எந்த பிரச்சனைக்கும் உடனடி தீர்வு என்பது சாத்தியமற்றது. அதற்காக வினையாற்றாமல் இருக்கவும் முடியாது.
எதிர்வினையாற்ற நீங்கள் போராட வேண்டும். உங்கள் போராட்டக்களம் வீதியல்ல், (வரனும்னுதான் அவன் எதிர்பாக்கறான்).
உங்க சமயலறை, படுக்கை அறை, பூஜை அறை, இதுவே உங்கள் களம். உலக அரசயல் இங்க இருந்துதான் ஆரம்பிக்குது. இத (தற்சார்பு) சரி பன்னாம நீங்க என்ன அரசியல் பேசினாலும் அது குப்பைதான்.
Refined oil க்கு பதில் செக்கு எண்ணெய் பயன்படுத்த முடியுமா?
காதலிக்கு / மனைவிக்கு / பிள்ளைகளுக்கு diary milk இல்லாம எள்ளு மிட்டாயும் தேனும் அன்பளிப்பா கொடுக்க முடியுமா? அதை அவர்கள் மன நிறைவுடன் ஏற்பார்களா? (இது ரொம்ப முக்கியம்)
Horlicksக்கு பதில் நீராகாரம் பருக முடியுமா?
அழகு சாதன பொருட்களை தவிர்த்து மஞ்சளும் / கடலை மாவும் பயன்படுத்த முடியுமா?
கடைக்கு போயி சாமான் வாங்க புகைவண்டி இல்லாமல் பை கொண்டு நடந்து போய் வாங்கி வர முடியுமா?
பூஜையறையை போல் புத்தகங்களுக்கு ஒரு அறை ஒதுக்கி நூலகம் வைக்க முடியுமா?
வீட்டை சுற்றியும் மரம் வளர்த்து தோட்டம் அமைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
ஆம் எனில் நீங்கள் ஆகச்சிறந்த போராளிகளே!
இவையெல்லாம் சிறிய விடயங்களாக தெரியும். ஆனால் செய்வது மிக கடினம். ஏனெனில் இவற்றுக்கு கார்ப்பரேட் (#நுகர்வு_கலாச்சாரத்திற்கு) நீங்கள் அடிமையாக்கப்பட்டுவிட்டீர்கள் என்பதே உண்மை.
தொலைக்காட்சியும், சினிமாவும் உங்களை அந்த அளவு மூளைச்சலவை செய்து வைத்துள்ளது.
இதை உணராமல் நீங்கள் என்ன அரசியல் பேசினாலும் அது வீண்தான்.
தனி மனிதர்களாக இதை சரி செய்தால், இது போல் நீங்கள் சில குழுக்களாக ஒன்றினைந்து தற்சார்பாய் உங்கள் தேவைகளை தீர்க்க முடியும்.
#தேவைதான் இங்கு அனைத்தையும் முடிவு செய்கிறது. தற்சார்பை முன்னெடுக்க பலர் இங்கு தயாராய் உள்ளனர் ஆனால் அதற்கான தேவை இல்லை என்பதே எதார்த்தம். முதலில் தற்சார்பிற்கான தேவையை உருவாக்குங்கள்.
தற்சார்பு தானாய் உருவாகும்.
ஒத்த எண்ணம் கொண்டோர் ஒன்று சேர சேர பெரிய பிரச்சனைக்கு தீர்வு காண இயலும்..
அதை விடுத்து வீதிக்கு வந்து வாய் கிழிய கத்தி போராட்டம் பன்னாலோ, கடையடைப்பு பன்னாலோ, நட்டம் உங்களுக்கு தான்.
இந்த தற்சார்பு வளரும் போது ஒவ்விரு வீட்டிலிருந்தும் ஒரு தலைவன் வருவான்.
நமக்கான நிலம் / அரசியல் / பொருளாதாரம் 100% நம் கட்டுப்பாட்டுக்குள் வரும் அன்று வீதிக்கு வா.
இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமா கூட தெரியலாம் ஆனா கசப்பான உண்மை இதான்.
மாற்றம் ஒரே நாளில் நடந்து விடாது. பல நூறு ஆண்டுகால மாற்றத்தை ஒரே தலைமுறையில் சரி செய்து விடவும் முடியாது.
மாற்றத்திற்கான விதையை நாம் விதைத்து அதை பாதுக்காத்து வளர்க்கும் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டும்.
அதுவரை நிழல் யுத்தம் செய்வோம்.

No comments: