Sunday, July 15, 2018

பெரியாரின் தாக்கம்...

அந்தக் காலங்களில் கணவனை இழந்த பெண்களை மொட்டையடிக்கச் செய்வது என்பது பிராமணக் குடும்பங்களில்  நிலவி வந்த வழக்கமாய் இருந்தது.
இன்று அத்தகைய பழக்கங்கள் கைவிடப் பட்டுள்ளன.
சடங்குகளில் இருந்து மீறக் கூடிய மனவலுவை சிந்தனையைத் தந்தவர் அவர்..
அந்தக் காலத்தில் கணவன் இறந்து விட்டால்..
மனைவிக்கு கோடி எடுத்துப் போட வேண்டும்..
எல்லாம் வெள்ளைச் சேலைகள்..
நெருங்கிய உறவினர்கள் போட வேண்டும்..
தாய் வீட்டுக்குக் கோடி என்றும் போடுவார்கள்.
என் தந்தை இறந்த சமயத்தில் 1987ல்... வெள்ளை போடக் கூடாது என்றேன்..
ஒரு ஒரு சேலை மட்டும் வெள்ளை..
மற்றதெல்லாம் கலர் சேலை என்று மாறியது..
வெள்ளை சேலை சட்டையை அவர்கள் உடுத்த அனுமதிக்கவில்லை.
அடுத்து சித்தப்பா வீட்டில் மாமா வீட்டில்.பின் சொந்தக்காரங்க அனைவரது வீட்டிலும் விதவைக் கோலம் வெள்ளை உடுப்பு மறைந்தது..
இப்படி ஒன்றொன்றாக மாறி இப்பொழுது கோடி போடுவது ஒழிந்தது..
பொட்டு வைத்துக் கொள்ள தடை கிடையாது..
30 ஆண்டுகளில் சடங்குகள் பல ஒழிந்துள்ளன.
பதினாறு நாள் சொந்தம் கூடி அழுவது.. துக்கம் அனுசரிப்பது ஒழிந்தது.
அடுத்த ஞாயிறே வேலை முடிஞ்சிடுது..
மின்மயானம் வந்ததும் உடனே சாம்பலைக் கரைஞ்சிட்டு ஊருக்கு ஓடறவங்க ஓடிறலாம்...
தாய் இறந்தால் என்ன? அதுக்கும் முடி இறக்குறதுக்கும் என்ன சம்மதம்? சடங்குகள் தேலையில்லை என தனிப்பட்ட முடிவுகளையும் நிகழ்த்துகிறோம்.
என் அக்காள் மகன் தந்தை இறந்ததற்கு மொட்டை அடித்தால் விசா கிடைக்காது என்று மொட்டையைக் கைவிட்டான்.
சரிதானே என்றார்கள்.
சடங்கைச் செய்றவன் வேண்டாமென்று முடிவு எடுத்து விட்டால் அதுவே செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.
குடும்பங்கள் தனித் தனியாக ஆனதும் பெருநகர வாழ்வு என்றானதும்   லீவு கிடைக்காது என்ற நிலையில் ..
சடங்குகள் தன்னாலே ஒழிந்து வருவதைக் காண்கிறோம்..
இதற்கான மனவலுவைத் தமிழகத்தில் விதைத்தவர்
"பெரியாரே".

No comments: