Thursday, September 13, 2018

நடிகர்கள் பிறப்பாலும் பிறரே... நடப்பாலும் பிறரே...

நடிகர்கள் பலருக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பாருங்கள்...

ஒரு புயலடித்தால்..
மழை வெளளம் வந்து பாதித்தால்..
கடல் பொங்கி கரையேறி வந்து பல மக்களை தாக்கிக் கொன்றால்..
புயல் அளவு மீறி புகுந்தழித்து மரங்களும் மக்களும் வீழ்ந்து தவித்தால்..
கடலுக்கு போன மீனவர்கள் காணாமல் போனால்...
கடல் நடுவே சிங்களன் இடைமறித்து தடுத்து சுட்டுக் கொன்றால்..
காவிரி நீர் திறந்து விடச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தால்..
அதை கருநாடகம் தர மறுத்தால்..
கருநாடகத்தில் தாய்மொழி தமிழில் பேசினால்..
தமிழ்ப் படங்களை திரையிட்டால், அதை எதிர்க்கும் கன்னட வெறித்தனத்தால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டால்..
தமிழர் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசுகளே தடை விதித்தால்..
அதை எதிர்த்து கட்டிளங் காளைகள் இறங்கி போராட்டக் களம் கண்டால்..
கதிராமங்களங்கள் கண்ணீர் வடித்தால்..
உழவுத் தொழிலுக்கே மைய மாநில அரசுகள் உலை வைத்தால்..
முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம், பாலாறு, காவிரி நீர் பெறும் உரிமையை இடை மறித்தால்..
உதவாது  தமிழ்? என இங்கே வந்தவன்கள் சொல்லக் கேட்டால்.. அந்நிய மொழியே சிறப்பென சொன்னால்..
காடே தீ பற்றி எரிந்தால்.. அதில் தமிழகமே
கண்ணீரும் கம்பலையுமாக நின்றால்..
ஈழத்தில் இன படுகொலை நடந்து, இலங்கையே ஒரு இனத்திற்கான நாடு என ஆக்கப்பட்ட பொழுதெல்லாம் காணாமல் போய்விடும்...

பிறமொழி நடிகர்கள்..
தேர்தல் என்றால்..
இடைத் தேர்தல் என்றால்..
விழா வேடிக்கைகள் யென்றால்..
நடிகர் சங்க, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்கள் என்றால்..
ஓடோடி வந்து அரிதார ஒப்பனைகளோடு நின்று விடுகிறார்களே..
எத்தனை வேகம்? எத்தனை கட்டுப்பாடு?
ஏத்தனை பதவிப் பற்று? எத்தனை எத்தனை சுரண்டல் ஆசை?
தமிழன் என்ன கோழைகளை பெற்றெடுத்த வறுமை இனமா? அல்லது வந்த நடிகனும் நடிகையும் வாழவும் ஆளவும் இருப்பதாக நினைவா?
இது தமிழரினத்தின் மானம் தலை நிமிர்ந்து நின்று கேள்வி கேட்கிறது.
இவர்களின் அரசியல் நுழைவும் ஆடம்பர கனவும்.
இந்த கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது தமிழரல்லாத வந்தேறிகளின் நடிப்புப் போலிகள்.
நாட்டின் எந்த ஒரு நெருக்கடியிலும் கேள்வி கேட்டு எழாத தமிழரல்லாத நடிப்பு பெருங்கூட்டம் புகலிடம் தேடும் இடம் தமிழ் நாட்டு அரசியல் அல்ல.
ஈகம். ஈகம். அது ஒன்றே தமிழினத்தின் வாழ்க்கை.
தமிழருக்கே அந்த ஒழுக்கம் இருக்கும்.
மாற்றாரை ஒதுங்கி வெல்ல ஒரு சேர எழுவோம்.
தமிழ்நாடு தமிழருக்கு மட்டுமே!
வாழ்க! எங்கள் தமிழினம்.
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

No comments: