🌾 *பள்ளி சிறுமிகள்* 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, *உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின்* கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.
🌾 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் *9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது*.
🌾 அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.
🌾ஐந்து மாணவிகளும் *ஸெஸ்* எனப்படும் *புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில்* விதைத்தனர்.
🌾 *தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர்*.
🌾 *மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர்.*
👉🏻இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.
🌾இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் *ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி* ஆகியவற்றை அளித்தனர்.
🌾12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர்.
🌾 *சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.*
🌾 *வைஃபை கருவி உள்ள அறையில்* *வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள்* *வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன*.
🌾 இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
🌾இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
🌾ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், *"இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்*.
🌾 இதுபற்றி மாணவிகள் கூறியது,
"எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
🌾சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்னை இருந்தது.
இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
🌾தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் *செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்*.
🌾 வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள்.
தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்'' என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.
சிறிய புல்லுக்கு விதைத்த விதை மிகப்பெரிய மரமாக முளைத்துள்ளது!
No comments:
Post a Comment